நன்மைகளை அள்ளித்தரும் காலை உணவு வேளை: ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்

OruvanOruvan

Morning_ Breakfast

காலை உணவு வேளை என்பது நாளாந்த உணவு வேளையில் அத்தியாவசியமானதாக அமைகிறது.

காலை உணவு வேளையை சரியான விதத்தில் தேர்ந்தெடுப்பது சிறந்ததொரு ஆரோக்கியத்தை மட்டுமன்றி சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் , சருமத்துக்கு தேவையான பளபளப்பையும் வழங்குகிறது.

அந்த வகையில் சருமம் பொலிவாக இருக்க காலை உணவு முக்கியமாக அமைகிறது.

பளபளப்பான சருமத்தை அளிக்கும் காலை உணவில் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என பார்க்கலாம்.

தண்ணீர் அருந்துதல்

நாளாந்தம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்த வேண்டும். இது எமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிகிறது.

காலை வேளையில் மட்டுமன்றி ஒரு நாள் முழுவதும் 3 லீட்டர் முதல் 4 லீட்டர் வரையில் தண்ணீர் அருந்த வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து நீரைப் பருகுவதால் அன்றைய நாள் மிகவும் உற்சாகமாக இருப்பதோடு சருமம் மிக பொலிவாக தோற்றமளிக்கும்.

உங்களுடைய நாளை புத்துணர்ச்சியுடன் செலவிடலாம்.

கிரீன் டீ

முழுமையான ஒரு காலை உணவு வேளையில் கிரீன் டீ என்பது முக்கியமாகும்.

பளபளப்பான சருமத்தையும் கிரீன் டீ வழங்குகிறது.

சருமத்திற்கும் , ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மைகளைப் பெற கிரீன் டீ குடிப்பது சிறந்தது.

காலை உணவில் முட்டையை சேர்த்தல்

முட்டை என்பது சத்தான ஒரு உணவுப் பொருளாகும்.

அதனை உணவில் சேர்ப்பதன் மூலம் பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.

முட்டை புரதச் சத்தின் மூலமாக கருதப்படுகிறது.

விட்டமின் A மற்றும் E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.

ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவு ஆகும். அவை உங்கள் சருமத்திற்கும் நல்லது. சருமத்தை மென்மையாக்கவும் ஈரப்பதமாக்கவும் உதவும். சுவை மற்றும் சரும நன்மைகளை அதிகரிக்க காலை உணவில் ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.