அழகையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் கசகசா !: மறைந்திருக்கும் காரணிகள்
அழகாக , ஆரோக்கியமாக இருப்பதை அனைவரும் விரும்புகின்றோம்.
தற்போது நிலவி வரும் வெப்பநிலை காரணமாக பலரது ஆரோக்கியத்திற்கும் சவால் ஏற்பட்டுள்ளது.
அழகாக , ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் மத்தியில் மிகப் பிரபல்யமான ஒரு விடயம் தான் கசகசா விதைகள்.
கசகசா விதைகள் பற்றி நீங்கள் அறிந்த விடயங்களுள் மறைந்திருக்கும் சில காரணங்கள் தொடர்பில் இன்று நாம் பார்க்கலாம்.
இதன் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் மற்றும் தீமைகள் பல உள்ளன.
இரும்பு, கல்சியம் மற்றும் மெக்னீசியத்தின் ஆதாரம் போன்றவை இதில் சேர்ந்திருப்பதால் 1 தேக்கரண்டி கசகசா விதைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் உங்கள் உணவில் உள்ள முக்கியமான குறைபாடுகளை நிரப்ப உதவும்.
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்து நிலையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது, ஆரோக்கியமான கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்துகிறது.
கசகசா விதைகள் மூல நோய் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஒவ்வாமை எதிர்ப்பு, பக்டீரியா எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு நன்மைகளை வழங்குகின்றன.
கொழுப்பை எரிப்பதால் உடல் எடையைக் குறைக்கிறது.
உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உணவுக்கு முன் கசகசா விதைகள் எடுத்துக் கொள்வதால் பசி குறையும்.
இவ்வாறான பல விதமான நன்மைகளை வழங்கக்கூடிய கசகசா விதைகளுள் சில தீமைகளும் அடங்கியுள்ளன.
தீமைகள்
கசகசா விதைகளை அதிகமாகப் பயன்படுத்துவதினால் உடலின் செரிமானத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.
இரத்தம் உறைதல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
சிறு குழந்தைகளுக்கு இதனை வழங்குவதை தவிர்க்குமாறு வைத்தியர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஒரு நாளைக்கு அரை தேக்கரண்டிக்கு மேல் எடுக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ள வேண்டாம், வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ளுங்கள்.
பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஒரு நாளைக்கு அரை தேக்கரண்டிக்கு மேல் எடுக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் எடுத்துக்கொள்ளவதை தவிர்க்க வேண்டும்.
ஒரு தேக்கரண்டி கசகசாவை ஒரு கப் தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைப்பதன் மூலம் 15 நிமிடங்களில், இதன் அளவு 3 மடங்கு அதிகரிக்கிறது.
இதை பகலில் குடிப்பது சிறந்தது . குடிநீரில் கலந்து குடிப்பதன் மூலம் மேலும் அதிக பயன்களை பெற்றுக் கொள்ள முடியும்.