அழிவின் விளிம்பில் சீஸ் உற்பத்திகள்!: ஆய்வில் தெரிய வந்த உண்மை

OruvanOruvan

Cheese Varieties

சீஸ் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் சீஸின் உப்பு கலந்த சுவைக்கு அடிமை என்று தான் கூற வேண்டும்.

அதிலும் ப்ளூ சீஸ், கேமம்பேர்ட் சீஸ், ப்ரீ சீஸ். ஆனால், வரக்கூடிய நாட்களில் இந்த சீஸ் வகைகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளதாக பிரான்ஸில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

நுண்ணுயிரிகளின் வேறுபாடு காரணமாக ஏற்பட்ட குழப்பத்தின் விளைவாகவே இவை அழியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

OruvanOruvan

camembert cheese

மிருதுவாகவும் க்ரீமியாகவும் இருக்கக்கூடிய இந்த கேமம்பெர்ட் சீஸானது, மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பென்சிலியம் பைஃபார்மினின் பல்வேறு இனங்களைப் பயன்படுத்தி அதன் வாசனை, நிறம், சுவை போன்றவற்றை சீஸ் தயாரிப்பாளர்கள் கொண்டு வருகின்றனர்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த கேமம்பெரட் சீஸ் தயாரிக்க பென்சிலியம் கேமம்பெர்டி என்ற குறிப்பிட்ட ஆல்பினோ இனம் பயன்பாட்டுக்கு வந்தது. இதன் விளைவாக கேமம்பெர்ட் சீஸ் அம்சத்திலுள்ள வேறுபாடு குறைய ஆரம்பித்தது.

OruvanOruvan

Blue cheese

மேலும் இந்த இனமானது, பிற பூஞ்சையுடன் சேரும் தன்மையை கொண்டிருக்கவில்லை. இதனால் ஓரின வித்திகளை உற்பத்தி செய்யும் திறன் குறைந்தது.

கடைசியாக தற்போது கேமம்பெர்ட் சீஸை உற்பத்தி செய்யும் கேமம்பெர்டி வித்திகளை உற்பத்தியாளர்களால் பெற முடியவில்லை.

இதனால், கேமம்பெர்ட் சீஸ் உற்பத்தி சவாலான காரியமாக உள்ளது.

OruvanOruvan

Free cheese