அனைவரும் இரத்த தானம் செய்ய முடியாது!: அதற்கான வரம்புகளும் சட்டதிட்டங்களும் உண்டு

OruvanOruvan

Blood donation rules

உயிருக்கு போராடும் நபருக்கு இரத்தம் கொடுத்து காப்பாற்றுவது என்பது எவ்வளவு பெரிய உன்னதமான செயல். ஆனாலும் அனைவராலும் இரத்ததானம் செய்ய முடியாது. அதற்கென்று சில வரம்புகளும் சட்டதிட்டங்களும் உள்ளன.

அந்த வகையில் யாரெல்லாம் இரத்ததானம் செய்ய தகுதியானவர்கள் எனப் பார்க்கலாம்.

ஆரோக்கியமானவர்கள் - எந்தவிதமான குறுகிய அல்லது நாள்பட்ட நோய்கள் இல்லாத நபர்கள் இரத்ததானம் செய்ய முடியும். இரத்ததானம் கொடுப்பதற்கு முன்பு முழுமையான உடற் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

OruvanOruvan

Blood donation rules

வயது எல்லை - 17 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களின் இரத்தத்தை இரத்த தான மையங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

உடல் எடை - சரியான உடல் எடையுடன் இருப்பவர்கள் இரத்தம் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியத்துக்கு எதுவித எதிர்மறையான தாக்கமும் ஏற்படாது.

ஹீமோகுளோபின் அளவுகள் - குறிப்பிட்ட வரம்புகளை சந்திக்கும் வகையில் ஹீமோகுளோபின் அளவுகள் இரத்த தானம் செய்பவர்களுக்கு இருக்க வேண்டும்.

கால இடைவெளி - ஒரு தடவை இரத்ததானம் செய்தவர்கள் அடுத்த தானம் செய்வதற்கு குறிப்பிட்ட கால அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இழந்த இரத்தத்தை மீட்டெடுப்பதற்கு போதுமான இடைவெளி எடுக்க வேண்டும்.

OruvanOruvan

Blood donation rules

அறுவை சிகிச்சைகள் செய்தவர்கள் - சமீபத்தில் அறுவை சிகிச்சைகள் அல்லது உடல் நலக் கோளாறிலிருந்து மீண்டவர்களின் இரத்தம் ஏற்றுக்கொள்ளப்படாது. காரணம் அவர்கள் முழுமையாக குணமடைந்திருக்க மாட்டார்கள்.

கர்ப்பிணிகள் - கர்ப்பிணிப் பெண்கள் அல்லது பாலூட்டும் தாய்மார்கள் இரத்த தானம் செய்யக்கூடாது. அது குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மருந்து நிலைகள் - இதய நோய், புற்றுநோய், எயிட்ஸ் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது.

போதை மருந்து பயன்படுத்துபவர்கள் - போதை ஊசி செலுத்திக்கொள்பவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. காரணம், அவர்களின் இரத்தத்தினூடாக மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

OruvanOruvan

Blood donation rules