மூக்கின் மீது கருப்பா சொரசொரன்னு இருக்கா?: உடனே இந்த பேக்கை போடுங்க

OruvanOruvan

skin care

மூக்கின் மேல் பகுதி மற்றும் மூக்கைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் பலருக்கு சொரசொரவென்று இருக்கும்.

பெண்கள் நிறைய பேர் இந்த கரும்புள்ளிகளை நீக்க கடைகளில் விற்கப்படும் பல கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. சில வேளைகளில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.

அதுவே வீட்டின் சமையலறையில் உள்ள தக்காளியை கொண்டு இந்த கரும்புள்ளிகளைப் போக்க முயற்சித்தால், குறைவான செலவில் கரும்புள்ளிகளைப் போக்கலாம்.

OruvanOruvan

skin care

தக்காளி ஃபேஸ் பேக்

முதலில் நன்கு கனிந்த தக்காளியை நன்றாக சுத்தம் செய்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அரைத்த தக்காளியை முகம் முழுவதும் தடவி, மென்மையாக 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி தக்காளியைக் கொண்டு அவ்வப்போது ஃபேஸ் பேக் போட்டு வர முகம் ஜொலிக்கும்.