அலுவலகக் காதல் ஆபத்தானதா?: ஏற்படும் பாதக விளைவுகள் என்ன?

OruvanOruvan

office love

நாம் தொழில்புரியும் இடத்தில் சக ஊழியர்களோடு நட்பு பாராட்டுவது என்பது இயல்புதான். அந்த நட்பு எதிர்காலத்தில் காதலாக மாறும் வாய்ப்புக்களும் அதிகம் உள்ளது. அந்த வகையில் அலுவலகத்தில் சக ஆண் அல்லது பெண் ஊழியரோடு ஏற்படும் காதல் எந்தளவுக்கு சாதக மற்றும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் எனப் பார்ப்போம்.

சாதக விளைவுகள்

அலுவலகத்தில் ஒன்றாக சேர்ந்து பணியாற்றும்போது அவர்களுக்கிடையில் நல்லதொரு புரிதலும் நெருக்கமும் ஏற்படும்.

தொடர்பாடல் திறன் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கும் திறனை புதுப்பித்துக் கொள்ளலாம்.

OruvanOruvan

office love

பாதக விளைவுகள்

எப்பொழுதுமே பதட்டத்துடன் பணிபுரிய வேண்டிவரும். சில சமயங்களில் சட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும். உதாரணத்துக்கு, காதல் வயப்பட்டிருக்கும் இருவரில் ஒருவர் மேலதிகாரியாக இருக்கும்போது இவ்வாறான பிரச்சினைகள் வரும்.

தொழில்முறை மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடையில் இருப்பதால் கருத்து வேறுபாடு, பாரபட்சம், சக ஊழியர்கள் முன்னிலையில் மோசமாக நடத்துதல் போன்ற சம்பவங்களும் நடக்கலாம்.

தொழிலில் ஒருவருக்கொருவர் சலுகை காட்டுவது, நெருங்கிப் பழகுதல், போன்வற்றை தடுக்க வேண்டும்.

எனவே உறவு, தொழில் இரண்டுமே பாதிக்காத வகையிவ் உங்கள் உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.