மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கப்பட இதுதான் காரணமா?: விழிப்புணர்வு பதிவு இதோ

OruvanOruvan

மாதவிடாய் சுழற்சி பெண்களின் உடலில் இயற்கையாக உண்டாகும் ஒரு நிகழ்வு. ஆனால் இன்னும் இலங்கை, இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாமலே உள்ளனர்.

இன்றும் இவ்விடயத்தில் பழமை மாறாமல் இருக்கிறார்கள். மாதவிடாய் காலத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் பெண்களை தீண்டத்தகாத விடயமாக நினைத்து தீட்டுக்காலத்தில் பெண்களை ஒதுக்கி வைக்கிறார்கள்.

ஒழுங்கற்ற மாதவிடாய்

மாதவிடாய் சுழற்சி படி 28 நாட்களுக்குள் வரவேண்டிய மாதவிடாய் 40 முதல் 60 நாட் களுக்கு ஒரு முறை வருவது உண்டு. சில பெண்களுக்கு 90 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும் உண்டு. இதிலும் பல மாற்றங்கள் இருக்கும்.

இவை எப்போதாவது இந்த பிரச்சினையை எதிர்கொள்வது சரி ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த சுழற்சியில் மாற்றங்கள் உண்டாகும் போது அவை ஒழுங்கற்ற மாதவிலக்காக அறிந்துக்கொள்ளலாம்.. ஆரம்பத்திலேயே இதற்கான காரணங்களை கண்டறிந்து முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

OruvanOruvan

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான அறிகுறிகள்

மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு உண்டாக்கும். நாள் ஒன்றுக்கு 6 நாப்கின்கள் வரை நனையக்கூடும். சிலருக்கு மூன்று நாட்கள் முதல் 5 நாட்கள் வரை இருக்கும் மாதவிடாய் இன்னும் சிலருக்கு 7 நாட்கள் வரை நீடிக்கும்.

இன்னும் சிலருக்கு 15 முதல் 20 நாட்கள் சமயத்தில் 25 நாட்கள் வரை அதிக உதிரப்போக்குடன் இருக்கும். இந்த உதிரப்போக்கு கட்டியாக வெளிப்படும். உடல் வலிவிழந்து மிகவும் பலவீனமாக சோர்வடையும்.

இவர்களது சுழற்சியில் அதிக இடைவெளி இருக்கும். முன்பு சொன்னது போல் 60 நாட்கள் வரை கூட ஆகலாம். இவை தொடரும் போது வேறு பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறீர்கள் என்பதை உணர்ந்து உடன் வைத்தியரை நாட வேண்டும்.

தவறாமல் மாதவிடாய் சுழற்சி உண்டாகும். ஆனால் இரத்தப்போக்கு அதிகம் இருக்காது.

நாள் ஒன்றுக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்துவதாக இருக்கும். முதல் நாள் மட்டும் மிக குறைந்த அளவு இரத்த போக்கு இருக்கும். உடல் பலவீனமாக இருக்கும்.

அதிக சோர்வுக்கு உள்ளாவார்கள். இவையும் ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான அறிகுறிதான்.இத்தகைய பிரச்சனைக்கு உள்ளாகும் பெண்கள் உடலில் போதிய சத்து இல்லை என்பதால் இரத்தம் வெளியேறவில்லை என்னும் தவறான வழிகாட்டுதலை நம்பிவிடுகிறார்கள்.

இவை தொடரும் போது வேறு பல பிரச்சினைகளுக்கான அறிகுறி என்பதை கவனிக்க தவறுவது பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும்.

அதிகப்படியாக பெண்கள் சந்தித்துவரும் இதை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இவை கருப்பையில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் அதாவது சினைப்பையில் நீர்க்கட்டி பிரச்சினை இருப்பவர்கள்,உடலில் ஹார்மோன் சமநிலையற்று இருத்தல் போன்றவை ஒழுங்கற்ற மாதவிடாயை உண்டாக்குகின்றன.

தைராய்ட் பிரச்சினை

தைராய்டு பிரச்சினை இருப்பவர்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை உண்டாகும். தைராய்டு சுரப்பிகள் சரிவர செயல்படாமல் இருக்கும் போது மாதவிடாய் பிரச்சினையில் மாற்றங்களும் உடல் எடையையும் அதிகரித்துவிடும்.

ஹைப்பர் தைராய்டை விட ஹைப்போதைராய்டு பிரச்சினை இருந்தால் இந்த பாதிப்பு வேறு பல பிரச்சினைகளையும் உண்டாக்கிவிடும்.

தைராய்டால் உடல் பருமன் ஒருபுறம் அதிகரிக்கும் போது உணவு பழக்கங்களிலும் ஜங்க் ஃபுட் உணவு வகைகளை பின்பற்றும் போது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை அதிகரிக்கவே செய்யும்.

இவைதவிர ஹார்மோன் சுரப்பு ஏற்றம் இறக்கமாக இருப்பதும் கூட ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்சினையை உண்டாக்கும்.

OruvanOruvan

என்ன செய்ய வேண்டும்?

ஒழுங்கற்ற மாதவிடாய் அறிகுறிகள் அனைத்தும் உங்கள் ஆரோக்கிய குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகள் தான். மாதவிடாய் வராமல் இருப்பது கூட நல்லதுதான் என்று ஒழுங்கற்ற மாதவிடாயை அலட்சியம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ஆனால் இந்த அலட்சியம் ஆபத்தில் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். அதிகப்படியான இரத்த போக்கு, குறைந்த இரத்த போக்கு, நீண்ட இடைவெளி மாதவிடாய் போன்ற அனைத்துமே தொடரும் போது அவை கருப்பையிலும் குழந்தைப்பேறிலும் சிக்கலை உண்டாக்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உண்டு. எனவே உடனே வைத்தியரை நாடவேண்டும்.

OruvanOruvan

மாதவிடாய் கால சுகாதர அறிவுறுத்தல்கள்

ஆண்டுதோறும் மாதவிடாய் சுகாதர தினம் மே 18 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாயின் போது பெண்கள் பின்பற்ற வேண்டிய சுகாதர முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பெண்கள் தங்கள் வாழ்நாளில் 6 முதல் 7 ஆண்டுகள் வரை மாதவிடாய் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

மாதவிடாய் நாளில் நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்கினை மாற்றவேண்டும்.குறைந்தது ஒர நாளில் மூன்று முறையாவத மாற்றவேண்டும்.

நைலான் உள்ளாடைகளை அணியவேண்டும்

சவர்க்காரம், வஜைனல் வாஸ் போன்றவற்றை பிறப்புறப்பிற்கு வெளியே பயன்படுத்தவேண்டும். உட்பகுதியை நாப்கின் மாற்றும்போதெல்லாம் வெறும் தண்ணீரால் சுத்தம் செய்தாலே போதும்.

OruvanOruvan

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வையும், சுகாதாரத்தையும் பெண்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

சிறு வயதிலிருந்தே மாதவிடாய் காலங்களைப் பற்றிய கல்வியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்காக இதைச் செய்ய வேண்டும்.

மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை எவ்வாறு அணுகலாம் என்பது குறித்து பெண்கள் மற்றும் பெண்களுக்கு கல்வி கற்பிப்பதில் சுகாதார நிறுவனங்கள் போராடி வருகிறது.

தற்போது அரச பாடசாலைகளில் பெண் பிள்ளைகளுக்கு இது குறித்த சுகாதாரத்தை வலியுறுத்துவதும் உண்டு.

மாதவிடாய் தீட்டு அல்ல, சுகாதாரத்தோடு கடக்க வேண்டிய மிக முக்கியமான சுழற்சி என்பதை பெண்களுக்கும் புரியும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இது குறித்த பார்வை மாறுபடும்.