ஆண்களை விட பெண்கள் தான் அதிக நேரம் தூங்கவேண்டும்: ஏன் தெரியுமா?

OruvanOruvan

Women need more sleep than men

இன்றைய காலத்தில் ஆண், பெண் என இருவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சினையாக தூக்கமின்மை உருவெடுத்துள்ளது.

அதற்கு காரணம் அவர்களின் வாழ்க்கை முறையும், பணிசுமையும்தான்.

ஆனாலும் தூக்கமென்பது மனித ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்று. தூக்கமின்மை பொதுவாகவே பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் ஆண்களை காட்டிலும்,பெண்களுக்கு தூக்கமின்மை என்பது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இன்று ஆண்களை விட பெண்கள் ஏன் அதிக நேரம் தூங்கவேண்டும் என்று பார்க்கலாம்.

OruvanOruvan

Women need more sleep than men

எவ்வளவு நேரம் தூங்கவேண்டும்?

சராசரி ஆணும் பெண்ணும் குறைந்தது 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்கவேண்டியது அவசியம்.

64 வயதிற்கு மேலானவர்கள் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்கவேண்டும்.

இளம் வயதினரும் குழந்தைகளும் 9 முதல் 10 மணி நேரம் வரை தூங்கலாம்.

OruvanOruvan

Women need more sleep than men

ஏன் பெண்கள் அதிக நேரம் தூங்கவேண்டும்?

ஆண்களை விட பெண்கள் குறைந்தது 20 நிமிடம் அதிகம் தூங்கவேண்டுமென ஆய்வுகள் கூறுகிறது.

பெண்களின் தூக்கத்தின் தரம் குறைவாய் இருப்பதுதான் முக்கிய காரணம்.

குறிப்பிட்ட வயதுகளில் அவர்களின் உடலிலும், மனதிலும் ஏற்படும் மாற்றங்கள் அவர்கள் தூக்கத்தை கெடுக்கின்றன.

ஆண்களை விட பெண்களே இளவயதில் இன்சொமேனியாவால் பாதிக்கப்படுகின்றனர்.

மாதவிடாய் முன்னரும் சரி, பின்னரும் சரி பெண்கள் மிகவும் நிம்மதியற்ற தூக்கத்தை அனுபவிக்கிறார்கள். மோசமான தூக்கம் இரவு நேர வியர்வை மற்றும் அதிக வலிக்கான காரணமாக இருக்கிறது.

ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் மனரீதியான மாற்றங்கள் பெண்களை அசௌகரியமாக உணரச்செய்யலாம்.

அதுமட்டுமின்றி இரவுநேர சிக்கல்கள், கை, காலில் ஏற்படும் வலி என அவர்களுக்கு தூக்கம் என்பது கனவை போல மாறிவிடும் எனவே அவர்கள் அதிகநேரம் தூங்கவேண்டியது அவசியம்.

தூக்கமின்றி தவிக்க பெண்ணாய் இருந்தாலே போதும். அடிவயிற்றில் வலி, அசௌகரியம், மனநிலை மாற்றம், பசியின்மை என இந்த அனைத்து பிரச்சினைகளும் இரவு தூக்கத்துடன் தொடர்புள்ளவை.

மாதவிடாய் தொடங்குவதற்கு முன்பே இந்த அறிகுறிகள் தோன்றி பெண்களை தூங்கவிடாமல் செய்யும்.

பெண்களின் பாலியல் ஆசையை நிம்மதியான தூக்கம் அதிகரிக்குமாம். பெண்களின் குழந்தை இன்மை பிரச்சினைக்கு தூக்கமும் ஓர் காரணம்.

அதுமட்டுமின்றி மேலும் பல உடலியல் பாதிப்புகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.

பெண்களுக்கு போதுமான தூக்கம் என்பது அவசியம். அது இல்லையெனில் அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்.

குறைவான தூக்கம் பெண்களுக்கு மனஉளைச்சல், இரண்டு வகையான சர்க்கரை நோய், இதய நோய்க்கான ஆபத்தை அதிகரித்தல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

ஆண்களுக்கு அவர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவு, அதிக இன்சுலின் சுரப்பு போன்றவற்றால் தூக்கமின்மையால் குறைவான பாதிப்பே ஏற்படுகிறது.

எனவே போதிய தூக்கம் கிடைக்கும்படி பெண்கள் திட்டமிட்டு கொள்வது நல்லது.