மருந்து அட்டைகளில் சிவப்பு கோடுகள் இருப்பது ஏன்?: மக்களின் கவனத்துக்கு....
அதிகரித்துவரும் நோய்களின் காரணத்தினால் மாத்திரை உட்கொள்ளாமல் ஒரு நாளைக் கழிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
அந்த வகையில் நாம் உட்கொள்ளும் மாத்திரைகளின் அட்டைகளில் இருக்கும் வித்தியாசமான குறியீடுகள், லேபிள்கள், அட்டவணைகள், தகவல்கள் என்பவற்றை எப்போதாவது பார்த்திருப்போமா?
பார்த்திருந்தாலும் இவை எதற்காக உள்ளன? இதன் அர்த்தம் என்ன? என்பவை தெரியாமல் இருக்கும்.
சிவப்பு கோடு அல்லது பெட்டி
மாத்திரையின் அட்டையின் மேல் சிவப்பு நிறத்தில் ஒரு கோடோ அல்லது மாத்திரை அட்டை அடங்கியுள்ள பெட்டியில் சிவப்பு நிறத்தில் சில தகவல்களோ இருந்தால் அந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் உட்கொள்ளக்கூடாது.
டோசேஜ்
மாத்திரையின் அட்டையில் எவ்வளவு டோசேஜ் அளவு மருந்து உட்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை கொடுக்கப்பட்டிருக்கும். இதனை நிச்சயமாக கவனிக்க வேண்டும். காரணம், மாத்திரைகளை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
அலர்ஜி
சில நேரங்களில் குறிப்பிட்ட மாத்திரைகள் அலர்ஜியை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஸ்டோரேஜ்
மாத்திரைகளின் லேபிளில் குறிப்பிட்டபடி, மருந்தை ஸ்டோர் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால்தான் மருந்தின் தன்மை மாறாமல் இருக்கும்.
காலாவதி திகதி
மருந்து அட்டையில் மருந்து தயாரிக்கப்பட்ட திகதி குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த திகதியினை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டும்.
துண்டுச்சீட்டு
நாம் வாங்கும் மருந்தில் ஒரு துண்டுச்சீட்டு மடித்து வைக்கப்பட்டிருக்கும். அதில் குறிப்பிட்ட அந்த மருந்தின் முழுமையான தகவல்கள், பக்க விளைவுகள் போன்றன குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதை நோயாளிகள் ஒரு தடவையாவது வாசித்துப் பார்க்க வேண்டும்.