எதற்காக டாபர்மேன் நாய்களின் வால் வெட்டப்படுகின்றன?: இதுதான் காரணமா?

OruvanOruvan

Dobber man dogs

நம்மில் பெரும்பாலானோருக்கு டாபர்மேன் நாய்களை வளர்ப்பதில் அதீத ஆர்வம் உண்டு.

அவற்றில் பெரும்பாலான நாய்களுக்கு வால் வெட்டப்பட்டிருக்கும்.

இதற்கு என்ன காரணம்?

டாபர்மேன் வேட்டை நாய் என்பதனால் அதன் வால் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதன் வால்கள் வெட்டப்படுவதாக கூறப்படுகின்றன.

இன்னும் சிலர், ஈக்கள், கொசுக்களை விரட்ட வால் இல்லாத காரணத்தினால் இவை எப்பொழுதும் கோபமாக இருக்கும் என்பதனாலும் வால் வெட்டப்படுகிறது என கூறுகின்றனர்.

ஆனால், இந்த காரணங்கள் தவறானது.

OruvanOruvan

Dobber man dogs

உண்மையில், டாபர்மேன் நாய்கள் மெல்லிய வால் அமைப்பைக் கொண்டவை. இவை எளிதில் அடிபட்டு விடும் என்ற காரணத்தினாலே இதன் வால் வெட்டப்படுகின்றன.

மிகவும் இளைய பருவத்திலேயே இதன் வால்கள் வெட்டப்படுவதனால் அவற்றின் பின்பகுதி வலுவடைகிறது. பின்பகுதி வலுவடைவதனால் டாபர்மேன் நாய்களுக்கு வேட்டையாடும் தன்மை அதிகரிக்கும்.

பழங்காலத்தில் டாபர்மேன் நாய்களை தாக்கும் ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாப்பை பெற்றுத் தர இதன் வால்கள் வெட்டப்பட்டன.

இவ்வாறு டாபர்மேன் நாயின் வாலை வெட்டுவது அவுஸ்திரேலியா, பின்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.