தொடரும் புகைப்பழக்கம்: வாழ்க்கையை மாற்றும் வழிமுறைகள்

OruvanOruvan

Quit Smoking

'புகைப்பிடித்தல் உயிரைக் கொல்லும், மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு' என காலாகாலமாக திரைப்படங்களில் அறிமுகத்தில் அனைவரிடமும் பகிரப்பட்டு வந்தாலும் இந்த இரண்டுமே விட முடியாத அன்றாட பழக்கங்களாக மாறிவிட்டன.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது இன்று சவாலாக அமைந்துள்ளது.

புகைக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கான சில வழிமுறைகள் பற்றி இன்று பார்க்கலாம்.

திட்டமிட்டு புகைத்தல்

புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என நீங்கள் திட்டமிட்ட பின்னர் அன்று முதல் கட்டாயம் புகைப்பதை நிறுத்துங்கள்.

ஒரு நாளில் புகைக்கும் சிகரட்டுகளின் எண்ணிக்கையை குறையுங்கள்.

நிச்சயமாக அதனை கடைபிடியுங்கள்.

உங்களை எப்போதும் வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்கு எப்போதெல்லாம் புகைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, அப்போதெல்லாம் உங்களை நீங்கள் வேலையில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிடுவதன் மூலம் புகைப்பிடிக்கும் எண்ணத்தை கைவிடலாம்.

உறுதி

தொடர்ந்தும் உற்சாகமாக இருக்கும் அதேவேளை சோர்வடைவதற்கான காரணங்களை தவிருங்கள்.

எனினும், நீங்கள் புகைக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

OruvanOruvan

Quit Smoking

தூண்டுபவற்றை தவிர்த்தல்

புகைக்கும் தூண்டலை உருவாக்ககூடிய சூழலை , நபர்களை தவிர்க்க வேண்டும்.

அவற்றிலிருந்து விலகியிருத்தல் சிறந்தது.

வேறு உணவுகளை உண்ணுதல்

உங்களுக்கு சிகரட் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் போது அதனை மாற்ற வேறு ஏதாவது சிறிய உணவு வகைகளை உண்பது சிறந்தது.

உங்களுக்கு நீங்களே பாராட்டு வழங்குதல்

நீங்கள் புகைக்காமல் கடத்தும் ஒவ்வொரு நாளிலும் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.

நேர்மறையான எண்ணங்களை தேர்ந்தெடுங்கள்.

வாழ்க்கையை மாற்றக்கூடிய திறன் நிச்சயம் எண்ணங்களுக்கு உள்ளது.