வரலாற்றில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரும் பணக்காரப் பெண்: எலான் மஸ்க் அம்பானியின் சொத்துக்களை சேர்த்தாலும் நிகராகாது

OruvanOruvan

World Rich Empress

வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களின் படி உலகின் பெரும்பணக்கார பெண்ணாக திகழ்ந்திருக்கிறார் சீனாவின் பேரரசி வூ.

பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பேரரசி வூ, இதுவரை வாழ்ந்தவர்களிலேயே பெரும் பணக்காரப் பெண்ணாக திகழ்ந்தார் என சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோடீஸ்வரர்கள் அல்லது பெரும் பணக்காரர்கள் என்றாலே, ​​எலான் மஸ்க், அர்னால்ட் பெர்னால்ட், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், இந்தியாவின் பணக்காரர் முகேஷ் அம்பானி போன்ற பெயர்கள் தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் வரலாற்றை புரட்டி பார்த்தால் மேலே குறிப்பிடப்பட்டவர்களின் ஒட்டுமொத்த சொத்துக்களை விடவும் அதிகமான சொத்துக்களை கொண்டிருந்தவர் சீன பேரரசி வூ என குறிப்பிடப்படுகிறது.

OruvanOruvan

அதாவது எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், முகேஷ் அம்பானி போன்ற பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை சேர்த்தாலும் பேரரசி வூவின் சொத்துக்கு நிகராகதாம்.

எலான் மஸ்க் 229 பில்லியன் அமெரிக்க டொலர்கள், ஜெஃப் பெசோஸ் 174 பில்லியன் டொலர்கள் மற்றும் முகேஷ் அம்பானி 106.2 பில்லியன் டொலர் சொத்துமதிப்பை முறியடித்து, பேரரசி வூ-வின் மொத்த சொத்து மதிப்பு 16 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டாங் வம்சத்தைச் சேர்ந்த பேரரசி வூ ஒரு புத்திசாலி ஆட்சியாளர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது ஆட்சி மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறு உத்திகளைக் கையாண்டார் என்றும் கூறப்படுகிறது,

OruvanOruvan

மேலும் தனது பதவியைப் பாதுகாக்க தனது சொந்த குழந்தைகளை நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை வூ மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பேரரசி வூ ஏறக்குறைய 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அந்த காலக்கட்டத்தில் சீனப் பேரரசு மத்திய ஆசியாவில் விரிவடைந்தது. அவரது ஆட்சியின் கீழ், சீனப் பொருளாதாரம் செழித்து வளர்ந்ததுடன், தேயிலை மற்றும் பட்டு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சியைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரரசி வூவின் செழுமையான மற்றும் கம்பீரமான வாழ்க்கை முறை, ஆகியவை "Empress of China" என்ற தொலைக்காட்சித் தொடர் உட்பட பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் சமகால மக்களுக்கும் தெரியவந்துள்ளது.