உறக்கத்தில் உங்கள் கால்கள் தானாக ஆடுதா?: அப்போ இந்த குறைபாடுகள் இருக்காம்

OruvanOruvan

Restless legs

நம்மை அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்குமே ஒரு பின்புல காரணம் உண்டு. அந்த வகையில் இரவில் உறங்கிக்கொண்டிருக்கும்போது, தன்னிச்சையாக உங்கள் கால்களை ஆட்டும் பழக்கம் இருக்கும்.

தொடர்ச்சியாக கால் ஆட்டும் பழக்கம் இருப்பவர்கள் அதனை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

இந்த கால் ஆட்டும் பழக்கத்தை நடுக்கம் என்று கூறுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும் இவற்றை குணப்படுத்த முடியும்.

ஓய்வில்லாத கால்கள் என்றால் என்ன?

ஓய்வில்லாத கால்கள் என்பது நரம்பு மண்டலத்தைச் சேர்ந்த பிரச்சினை. இது கால்களில் தேவையில்லாத உணர்வுகளைத் தூண்டி தன்னிச்சையாக அசைய வைக்கின்றன. இரவு நேரங்களில்தான் இது அதிகமாக இருக்கும். இதன் காரணமாக உங்கள் உறக்கம் பாதிக்கப்படும்.

விட்டமின் பி, விட்டமின் சி, விட்டமின் டி, விட்டமின் இ போன்ற குறைபாடுகளினால் இந்த ஓய்வில்லாத கால்கள் நோய்க்குறி ஏற்படுகிறது.

OruvanOruvan

Restless legs

விட்டமின் பி - கால்கள் நடுக்கத்துக்கும் விட்டமின் பி குறைபாட்டுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அந்த வகையில் விட்டமின் பி12 மற்றும் பி6 உள்ள மீன், முட்டை, காய்கறிகள் போன்ற உணவுகளை உண்பதன் மூலம் இதனை குணப்படுத்த முடியும். மேலும் விட்டமின் பி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் பல பக்க விளைவுகள் ஏற்படும்.

விட்டமின் டி - விட்டமின் டி குறைபாட்டினால் டோபமைன் செயலிழந்து ஓய்வில்லாத கால்கள் நோய்க்குறி ஏற்படுகிறது. விட்டமின் டி நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் நரம்பியல் செயல்பாடு மற்றும் தசைகளின் அசைவுகளை ஒழுங்குப்படுத்தலாம். மேலும் விட்டமின் டி உடலுக்கு கேடு விளைவிக்கும்.

விட்டமின் சி மற்றும் இ - உடலிலுள்ள செல்கள் பாதிக்காமல் இருக்க விட்டமின் சி மற்றும் விட்டமின் இ நிறைந்த உணவுகள் பயனுள்ளதாக இருக்கும். இந்த விட்டமின்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்து தந்தாலும் ஏனைய மருந்துகளோடு சேரும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும்.

என்னதான் விட்டமின் மாத்திரைகள் ஓய்வில்லாத கால்கள் நோய்க்குறியை மட்டுப்படுத்தும் என்றாலும் சரியான வழிகாட்டுதல் அவசியம் தேவை.

OruvanOruvan

Restless legs