த்ரில்லர் பாணியிலான புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகமா?: அப்போ இந்த கதைகளை வாசியுங்கள்

OruvanOruvan

Thrilling Story Books

புத்தகங்கள் படிப்பது ஒரு சிலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. காதல் கதைகளை உள்ளடக்கிய புத்தகங்களை அதிகம் படிப்பவர்களும் உண்டு. அதேசமயம் த்ரில்லர், கொலை போன்ற விறுவிறுப்பான நாவல்களை படிப்பவர்களும் உண்டு.

அப்படி த்ரில்லர் நாவல்கள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அருமையான புத்தகங்கள் உள்ளன. அந்த வரிசையில்,

பிக் லிட்டில் லைஸ் (Big Little Lies)

OruvanOruvan

Big Little Lies

இந்த புத்தகத்தை எழுதியவர் லையன் மொரைடி. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படமானது, வெவ்வேறு வகை வாழ்க்கையை பின்னணியாகக் கொண்ட மூன்று பெண்கள் ஒரு சம்பவத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

அவர்கள் அந்த பிரச்சினையிலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பதை இந்தப் புத்தகம் விபரிக்கிறது.

இன் தி வுட்ஸ் (In The Woods)

OruvanOruvan

In The Woods

டானா ஃப்ரென்ஞ் என்பவர் எழுதிய இந்த புத்தகம், இரண்டு துப்பறிவாளர்கள் 12 வயது குழந்தை எவ்வாறு கொல்லப்பட்டது என்பதை கண்டுபிடிப்பதாக கதை அமையும்.

தி டா வின்ஸி கோட் (The Da Vinci Code)

OruvanOruvan

The Da Vinci Code

டே பிரவுனால் எழுதப்பட்டு கடந்த 2003ஆம் ஆண்டு வெளியானது இந்தப் புத்தகம். இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும் வரையில் வாசகர்களுக்கு தூக்கமே வராது.

தி கேர்ள் ஆன் தி ட்ரெயின் (The Giral On The Train)

OruvanOruvan

The Giral On The Train

பாலா ஹாக்கின்ஸ்ஸினால் எழுதப்பட்ட இந்த புத்தகம், தினமும் ரயிலில் பயணிக்கும் ஒரு பெண், தினமும் தனது ரயில் பயணத்தின்போது பார்க்கும் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்து கொள்கிறாள். அவளை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிப்பதே இந்தப் புத்தகத்தின் கதை.

தி வுமன் இன் வைட் (The Women In White)

OruvanOruvan

The Women In White

வில்கி காலின்ஸால் 1860ஆம் ஆண்டு எழுதப்பட்டது இந்தப் புத்தகம். ஓவியர் ஒருவர் வெள்ளை நிற உடையணிந்த ஒரு மர்மமான பெண்ணை இரவு நேரத்தில் ஒரு இடத்தில் பார்க்கிறார். அவள் யார்? என்பதை வைத்து இந்தக் கதை செல்கிறது.