உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா?: அப்போ உங்களுக்கு காதல் நோய் ஏற்பட்டிருக்கு...

OruvanOruvan

Fall in love

காதல் என்பது ஒரு புதுவித உணர்வு. ஒருவருக்கு காதல் வரும்போது அவர் மன ரீதியாக மட்டுமல்ல உடல் ரீதியாகவும் சில மாற்றங்களுக்கு ஆளாகுவார்.

நமது மூளையிலுள்ள யூஃபோரிக் எனும் இரசாயன வெளியீடானது, தங்கள் துணையுடன் பிணைக்க உதவுகிறது.

அந்த வகையில் காதல் வரும்போது உடலில் எந்தவகையான இரசாயன மாற்றங்கள் உண்டாகும்?

OruvanOruvan

Fall in love

உடல்நிலை சரியில்லாத உணர்வு

நீங்கள் ஒருவருடன் காதலில் விழும்போது, உங்களுக்கு பசியின்மை மற்றும் சங்கடமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

காதல் நோயானது, உண்மையில் உங்கள் வயிற்றிலுள்ள இரத்த நாளங்களை சுருங்கச் செய்து கார்டிசோல் என்ற மன அழுத்த ஹோர்மோன்களை வெளிப்படுத்துகிறது. இது உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடும்போது காலப்போக்கில் மாறிவிடும்.

குடிபோதையில் இருப்பது போன்ற உணர்வு

ஒரு கோப்பை வையின் குடித்தால் எப்படி ஒரு போதை வருமோ அதுபோன்ற உணர்வை காதல் ஏற்படுத்தும்.

OruvanOruvan

Fall in love

அபார சக்தி

நீங்கள் காதலிக்கும்போது உங்கள் உடலில் வெளியாகும் ஆக்ஸிடாஸின் ஹோர்மோன் உடல் வலிக்கான வலியைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் காதலில் இருப்பவர்கள் மற்றவர்களை விடவும் வலிமையாக உணர்வார்கள்.

உங்கள் துணையின் முகத்தை காண ஆசைப்படுவீர்கள். இதன் காரணமாக மூளையில் உள்ள டோபமைன் வெளியீட்டால் ஏற்படுகிறது.

கன்னங்கள் சிவந்து, உள்ளங்கைகள் வியர்க்கும்

உங்கள் இதயத்துடிப்பு அதிகரித்து, வியர்க்க ஆரம்பிக்கும். இது உங்களது உடலில் அட்ரினலின் மற்றும் நோர்பைன்ப்ரைனின் தூண்டுதலினால் ஏற்படுகிறது.

OruvanOruvan

Fall in love

கவலை

உங்கள் துணையை விட்டு நீங்கள் விலகி இருக்கும்போது கார்டிகோட்ரோபின் என்ற ஹோர்மோன் வெளியீட்டை சந்திப்பீர்கள். இது உங்களுக்கு கவலை மற்றும் மனச்சோர்வை உண்டாக்கும்.