'சிவப்பு நிற மை'யில் பெயரெழுதினால் இறந்துவிடுவார்கள்!: எந்த நாட்டில் தெரியுமா?

OruvanOruvan

Don't write in red color ink

பூனைகள் குறுக்கே சென்றால் கெட்ட சகுனம், கண் துடித்தால் கெட்ட சகுனம் இதுபோன்ற பல மூட நம்பிக்கைகள் நமது சமூகத்தில் உலா வருகின்றதைப் போலவே,

ஒரு சில நாடுகளில் சிவப்பு நிற மையில் எழுதுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆம், தென்கொரியா, போர்த்துக்கல், ஜப்பான் போன்ற நாடுகளில் சிவப்பு நிற மையில் எழுதுவதற்கு தடை.

தென்கொரியாவைப் பொறுத்தவரையில் சிவப்பு நிற மை தீங்கான ஒரு விடயமாக கருதப்படுகிறது. அதனாலேயே பிள்ளைகளிடமிருந்து சிவப்பு நிற பேனாக்கள் தள்ளி வைக்கப்படுகின்றன.

OruvanOruvan

Don't write in red color ink

தென்கொரியர்கள் தங்கள் வீடுகளில் சிவப்பு நிற பேனைகளை வைத்திருக்காததற்கு காரணம் என்னவென்றால், சிவப்பு நிற பேனையில் ஒருவர் இன்னொருவரின் பெயரை எழுதினால் அந்த நபர் இறந்து விடுவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.

உண்மையில் சிவப்பு நிற மையில் எழுதினால் இறப்பு ஏற்படாது.

கொரிய கலாசாரத்தின்படி இறந்தவர்களின் பெயர்களை சிவப்பு நிற மை கொண்டு எழுதுவார்கள். ஆனால், உயிரோடிப்பவர்களின் பெயர்களை சிவப்பு மையில் எழுதினால், அந்த நபர் இறந்துபோக வேண்டும் என்று இவர் ஆசைப்படுவதாக நம்பப்படுகிறது.

போர்த்துக்கலிலும் சிவப்பு நிற மையில் எழுதுவது, முரட்டுத்தனமாக கருதப்படுகிறது.

OruvanOruvan

Don't write in red color ink

மேலும் கொரியாவில் ஜோசியான் சாம்ராஜ்ஜியத்தைச் சேர்ந்த இளவரசர் சுயாங், தாம் எழுத வேண்டிய எதிரிகளின் பெயர்களை சிவப்பு நிற மையைப் பயன்படுத்தித்தான் எழுதுவாராம்.

அதுமட்டுமின்றி கொரிய போரின்போது இறந்த போர்வீரர்களின் பெயர்களை சிவப்பு நிற மையைப் பயன்படுத்தித்தான் அகற்றியுள்ளனர்.

எனவே, சிவப்பு நிற மையானது, துரதிர்ஷ்டமான நிகழ்வுகளுடன் தொடர்புடையது. இதனால்தான் மக்கள் சிவப்பு நிற மையை பயன்படுத்த தயங்குகின்றனர்.