இந்த கிராமத்தில் குடியேறுபவர்களுக்கு வீடு, கார், போக்குவரத்து என அனைத்தும் இலவசம்!: சீனாவின் பணக்கார கிராமம்

OruvanOruvan

Huaxi village china

ஒரு சில கிராமத்தில் இருக்கும் பழக்கவழக்கங்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடுகின்றது.

அந்த வகையில், சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஜியாங்யின் கவுண்டியில் ஹூவாக்ஸி எனும் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தைப் பொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வாரு குடும்பமும் ஒரு வீடு, குறைந்தபட்சம் ஒரு கார், 150,000 மதிப்பிலான பணம் என சொத்துக்களை கொண்டுள்ளனர்.

இந்த கிராமம் முழுவதும் சிவப்பு கூரை பொருத்தப்பட்ட வில்லாக்கள், புல்வெளிகள் என பார்ப்பதற்கு கண்களைக் கவரும் விதத்தில் உள்ளன.

கடந்த 1961ஆம் ஆண்டில் உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் Wu Renbao என்பவரால் இந்த கிராமம் நிறுவப்பட்டது.

OruvanOruvan

Huaxi village china

ஏழை விவசாய சமூகத்தை பணக்கார சமூகமாக மாற்றுவதே இவரது எண்ணம்.

அதனடிப்படையில் இங்கு வணிகம், விவசாயம், தொழில்துறை அனைத்தும் இங்கு உள்ளது.

இதுவொரு 'முன்மாதிரி சோசலிச கிராமம்' ஆகும்.

சுமார் 400 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு புதிதாக குடியேறும் மக்களுக்கு ஐரோப்பிய பாணியில் அமையப்பெற்ற வில்லா, கார், தொழில்,கல்வி, மருத்தவ வசதி,போக்குவரத்து வசதி என அனைத்தும் இலவசம்.

ஆனால், இந்த வசதிகள் அனைத்தும் இந்த கிராமத்தில் இருக்கும்வரை மட்டுமே கிடைக்கும். இந்த கிராமத்தை விட்டுச் செல்லும்போது அனைத்தையும் கிராம நிர்வாகத்திடம் ஒப்படைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

இந்த கிராமத்தில் நட்சத்திர விடுதிகள், தீம் பார்க் போன்ற பல வசதிகள் உள்ளன.

OruvanOruvan

Huaxi village china