இலங்கை ஸ்டைலில் ரசம்: தக்காளி, ரசப்பொடி எதுவும் தேவையில்லை

OruvanOruvan

Srilankan Rasam

தமிழர்களின் உணவில் ரசத்திற்கு முக்கிய பகுதி உண்டு.

தினமும் ஒரு கப் ரசம் குடித்தால், செரிமானத்திற்கு நல்லது, மலச்சிக்கல் தடுக்கப்படும், கர்ப்பிணிளுக்கு நல்லது, ஏன் எடை இழப்பிற்கு கூட உதவும்.

தக்காளி, ரசப்பொடி எதுவும் சேர்க்காமல் செய்யப்படும் இலங்கை ரசம் எப்படி செய்வது என்று இன்று பார்க்கலாம்.

OruvanOruvan

Srilankan Rasam

தேவையான பொருட்கள்

  1. பெரிய வெங்காயம் - 1/2 (நறுக்கியது)

  2. பூண்டு - 4-6 பல் (நறுக்கியது)

  3. இஞ்சி - ஒரு சிறிய துண்டு

  4. மல்லி விதைகள் - 1 தேக்கரண்டி அளவு

  5. சீரகம் - 1 1/2 தேக்கரண்டி அளவு

  6. மிளகு - 1 தேக்கரண்டி அளவு

  7. வரமிளகாய் - 1-2

  8. சோம்பு - 1/4 தேக்கரண்டி அளவு

  9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி அளவு

  10. பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி அளவு

  11. உப்பு - சுவைக்கேற்ப

  12. புளி நீர் - 350 மிலி

  13. தண்ணீர் - 350 மிலி

OruvanOruvan

Srilankan Rasam

செய்முறை

முதலில் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, சீரகம், மல்லி மற்றும் மிளகு ஆகியவற்றை போட்டு, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சாறு மற்றும் நீரை ஊற்ற வேண்டும்.

சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி, 3 நிமிடம் உயர் தீயில் வைத்து மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

பின் மூடியைத் திறந்து, அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, ஒரு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, பெருங்காயத் தூள் சேர்த்து கிளறினால், சுவையான இலங்கை ஸ்டைல் ரசம் தயார்.