பேய்கள் இருப்பது உண்மையா?: பயத்தில் உறைய வைக்கும் பேய்கள்
பேய்கள் பற்றிய சில கதைகள் காலம் காலமாக தொடர்ந்துவந்து கொண்டேயிருக்கின்றது. அந்த வகையில் பேய்கள் இருப்பது உண்மைதானா? அதற்கு ஏதேனும் சான்றுகள் இருக்கிறதா?
பேய் என்றால் என்ன?
ஒருவர் இறந்ததன் பின்னர் அவரது ஏதோ ஒருவகை எச்சம் அவர் வாழ்ந்த இடங்களில் அலைந்து கொண்டிருப்பதான நம்பிக்கையே பேய், பிசாசு என்று கூறப்படுகிறது.
ஒருவர் இறந்து எட்டு நாட்கள் வரையில் அவரது ஆன்மா அவரது வீட்டைச் சுற்றும் என கூறப்படுகிறது.
பேயை பார்த்திருக்கிறேன், அதன் இருப்பை உணர்ந்திருக்கிறேன் எனக் கூறும் பலர் இருந்தாலும் பேயா? அதெல்லாம் பிரம்மை மட்டுமே எனக் கூறும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
பேய்களில் எத்தனை வகைகள் உள்ளன?
ஊடாடும் பேய்கள்
இந்த பேய்களுக்கு 'பொதுவான பேய்கள்' என்ற பெயரும் உண்டு. இவர்கள் முக்கியமான தகவல்களை தெரிவிக்க வரும் அன்பானவர்கள். இந்த பேய்கள் வாசனைத் திரவியம், சிகரெட் புகை போன்ற வாசனைத் திரவியங்களை உமிழும்.
புனல் பேய்கள்
தங்கள் அன்புக்குரியவர்களைப் பார்க்க மீண்டும் வரும் பேய்களே புனல் பேய்கள். இவை வரலாற்றுக் கட்டிடங்கள், தனியார் வீடுகளுக்குள் இருக்கும்.
புனல் பேய்களாவன குளிர் புள்ளிகளை ஏற்படுத்துகின்றன. இவை காணப்படும்போது அவை சுழலும் புனல் போல் இருக்கும். இவற்றை புகைப்படமெடுக்கலாம்.
நிழல் பேய்
ஒரு நொடியில் மறைந்துவிடும் இந்த பேய்களை வெறும் கண்ணால் பார்க்கலாம். நீங்கள் இந்த பேய்களைக் கண்டால், அவை மூலைகளிலும், சுவர்கள் வழியாகவும், மறைவுகளிலும் ஒளியலாம்.
விலங்கு பேய்கள்
இந்த வகை பேய்கள் கதவுகளிலோ அல்லது சுவர்களிலோ சத்தத்தை ஏற்படுத்தும். இவை முழு உடல் தோற்றங்களாக தோன்றினாலும், விலங்கு பேய்கள் பொதுவாக கண்களால் உணரப்படுவதைப் பார்க்கிலும் காதால் சத்தங்களின் மூலம் உணரப்படுபவை.
பொல்டெர்ஜிஸ்ட்
இவற்றை 'சத்தமான பேய்கள்' என்றும் கூறலாம். இவற்றால் உடல் சூழலைக் கையாள முடியும். ஜன்னல்களை திறத்தல், நாற்காலிகளை நகர்த்துதல், புத்தகங்களை அலுமாரியிலிருந்து நகர்த்துதல், நெருப்பை உருவாக்குதல் போன்ற ஆபத்தான விடயங்களை இவ்வகை பேய்கள் செய்யும்.
டீமனிக்
இந்த வகை பேய்கள் உயிருள்ள நபருக்குள் ஊடுருவும்போது அது அவர்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துகிறது. இந்த பேய்கள் அதிக வலிமையானவை. மக்களை காயப்படுத்தலாம்.
டீமன்ஸ்
எந்த வடிவத்திலும் உருவாகும் இந்த பேய்கள், அதிக சக்தி வாய்ந்தவை. பொருள்களுடன் தங்களை இணைத்துக்கொள்ளும். மன, உடல் ரீதியான சித்திரவதைகளை செய்யும். இந்த பேய்களிடம் எந்தவொரு சவாலையும் விட்டுவிடக்கூடாது. ஏனென்றால் இவை கொல்லும் திறன் கொண்டவை.
ஆர்ப்ஸ்
ஆர்ப்ஸ் என்பது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்கும் ஒரு மனிதனின் அல்லது விலங்கின் ஆன்மா. இவை வட்டங்களாகத் தோன்றுகின்றன. இவை பொதுவாக வெள்ளை அல்லது நீல நிறத்தில் காணப்படும்.
எக்டோ - மிஸ்ட்
இந்த வகை பேய்கள் தரையிலிருந்து பல அடி உயரத்தில் தோன்றும். அவை வெள்ளை, சாம்பல், கறுப்பு நிறங்களில் இருக்கும். இவற்றால் விரைவாக நகர முடியும். இவை வெளிப்புறங்கள், கல்லறைகளில் தோன்றும்.
லெமூர்
இவை மிகவும் கோபமான பேய்கள். அழிவு, இருள், துரதிர்ஷ்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இவ்வகையானவர்கள் தங்கள் வாழ்வை தானாக முடித்துக்கொண்டிருப்பார்கள், சரியாக அடக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்கள், மேலும் அவர்களுக்கு துக்கம் அனுஷ்டிக்க குடும்பம் இருந்திருக்க மாட்டார்கள்.
கூட்ட பேய்
இவை சிதைந்த வடிவங்களின் வடிவத்தைக் கொண்டன. இந்த பேய்கள் கூட்டமாக ஈர்க்கப்படுகின்றன.
உயிரற்ற பேய்கள்
இந்த வகை பேய்கள் கப்பல்கள், கார்கள், ரயில்களில் வசிக்கும். இந்த பேய்களுக்கும் மற்ற பேய்களுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் இருக்காது.
பேய் குறித்த பொதுவான கருத்து
கிராமங்களில் மட்டுமில்லாமல் நகரங்களிலும் கூட பேய்கள் குறித்த பலவிதமான கருத்துக்கள் பரவி வருகின்றன. அதிலும் கிராமங்களில் 6 மணிக்குமேல் வெளியில் செல்லக்கூடாது. அசைவம், எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு வெளியில் சுற்றித்திரியக் கூடாது.
புளிய மரம், முருங்கை மரத்துக்கடியில் இரவு நேரங்களில் நிற்கக்கூடாது. இப்படி பல கட்டுப்பாடுகள் இன்றளவும் காணப்படுகிறது. இவ்வாறு கட்டுப்பாடுகள் நிலவ பேய் அச்சமும் ஒரு காரணம்.
பேய் பிடித்தல் குறித்து மருத்துவ உலகம் என்ன கூறுகிறது?
முழுக்க முழுக்க மனநலம் சார்ந்த பிரச்சினை. ஒரு மனிதரின் உடலும் மனமும் ஒத்து செயல்படுவதே இயல்பாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு இயல்புக்கு மாறாக ஒருவர் செயல்படுவதை மருத்துவத்துறை ஆளுமைச் சிதைவு (Dissociation) என்கின்றனர்.
எது எவ்வாறெனினும் பேய்கள் குறித்த விளக்கம் இன்னும் முழுமையாக இல்லை என்பதே உண்மை.