பேஸ்ட்டில் இருக்கும் கலர் code-க்கு என்ன அர்த்தம்? உயிருக்கே ஆபத்து...: இனி பார்த்து வாங்குங்கள்

OruvanOruvan

Toothpaste Color

காலையில் எழுந்ததும் தினமும் நாம் மறக்காமல் செய்யும் ஒரு விஷயம் பல் துலக்குவது.

அதிலும் நம்மில் பலர் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குகிறோம்.

நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டுகள் தற்போது பல்வேறு வகைகளில், விலைகளில் வருகின்றன.

அவை நம்முடைய பற்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறோம். ஆனால் அவை நம்முடைய உயிருக்கே ஆபத்தினை விளைவிக்கக் கூடிய ஒன்று. நாம் வாங்கும் பெரும்பாலான டூத் பேஸ்ட்டுகளில் உயிர்க்கொல்லிகள் அதிகமாகக் கலக்கப்படுகின்றன.

நம்மில் பலர் பேஸ்ட் வாங்கும் போது சில விடயங்களை கவனத்தில் எடுப்பது கிடையாது. குறிப்பாக பேஸ்டின் கீழ் பகுதியில் இருக்கும் நிறத்தை கவனித்து தான் டூத் பேஸ்ட் வாங்க வேண்டும்.

டூத் பேஸ்ட்டில் கருப்பு, பச்சை, சிவப்பு மற்றும் நீல நிற குறியீடுகள் இருக்கும். இந்த குறியீடுகளுக்கு ஒவ்வொரு அர்த்தம் இருக்கின்றது. இது குறித்து இனி பார்க்கலாம்.

OruvanOruvan

Toothpaste Color

கருப்பு நிறம்

கருப்பு நிறம் இருந்தால், பேஸ்ட்டை தயாரிப்பதில் நிறைய இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சிவப்பு நிறம்

நீங்கள் உபயோகிக்கும் பேஸ்ட்டில் சிவப்பு நிறத்தை கண்டால், இயற்கை பொருட்களுடன் பல வகையான இரசாயனங்களும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக அர்த்தம். இது உங்கள் பற்களுக்கு நல்லது அல்ல.

நீல நிறம்

இந்த பேஸ்ட்டில் இயற்கையான பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளதாக அர்த்தம்.

பச்சை நிறம்

உங்கள் பேஸ்ட்டில் பச்சை நிறம் இருந்தால், இதில் இயற்கை பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதாகும். எனவே பச்சை நிறத்தில் இருக்கும் டூத் பேஸ்ட் உடலுக்கும், வாய்க்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.

OruvanOruvan

Toothpaste Color

அதிகம் பணம் கொடுத்து விலையுயர்ந்த பேஸ்ட்டுகளை பயன்படுத்தி கூடவே நோயையும் சேர்த்து வாங்குவதை விட, வீட்டிலேயே டூத் பேஸ்ட் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

கிளே பேஸ்ட் அதாவது மண்ணில் நம் முன்னோர்கள் பல் துலக்கினார். அதை முட்டாள்தளம் என்று சொன்னோம். ஆனால் அதுதான் ஆரோக்கியம் நிறைந்தது என்பதை உணர தவறிவிட்டோம்.

அதைத்தவிர, வேப்பிலையின் குணம் நிறைந்த, வேப்பிலை எண்ணெய் உட்பொருளாகக் கொண்ட, கிராம்பு உட்பொருளாகக் கொண்ட டூத் பேஸ்ட்டுகளை வாங்கிப் பயன்படுத்துவது நம்முடைய பணத்தை சேமிப்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய பற்கள் மற்றும் சிறுநீரகம், கல்லீரல் போன்ற உள்ளுறுப்புகளையும் பாதுகாக்க முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.