நாவில் வைத்ததும் கரையும் அருமையான பிஸ்கட் குலாப் ஜாமூன்: இப்படி செய்து பாருங்கள்

OruvanOruvan

Biscuit Gulab Jamun

இனிப்புக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அதுவும் குலாப் ஜாமூனை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. அப்படிப்பட்ட குலாப் ஜாமூனை பிஸ்கட்டைக் கொண்டு இனி வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்

  • பிஸ்கட் - 2 பாக்கெட்

  • பால் - அரை கப்

  • சீனி - 1 கப்

  • ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை

  • எண்ணெய் - தேவையான அளவு

OruvanOruvan

Biscuit Gulab Jamun

செய்முறை

முதலில் பிஸ்கட்டுக்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்துக்கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சீனி சேர்த்து, தண்ணீர் ஊற்றி சீனிப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து பொடித்து வைத்துள்ள பிஸ்கட் தூளில் சிறிது சிறிதாக பாலை சேர்த்து, குலாப் ஜாமூன் உருண்டைகள் உருட்டும் அளவுக்கு மாவை பிசைந்துகொள்ள வேண்டும்.

உருட்டிய உருண்டைகளை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்துள்ள குலோப் ஜாமூன் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும்.

கடைசியாக காய்ச்சி வைத்துள்ள சீனிப் பாகில் பொரித்து வைத்துள்ள உருண்டைகளை போட்டு ஊறிய பின் சாப்பிட்டால் அருமையான பிஸ்கட் குலோப் ஜாமூன் வீட்டிலேயே தயார்.