மிகவும் விலையுயர்ந்த திருமண ஆடைகள் அணிந்தவர்கள் யார் தெரியுமா?: தெரிந்து கொள்ளுங்கள்

OruvanOruvan

Bridal dress

திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு தடவை நடப்பது. அந்த திருமணத்தில் அணியவிருக்கும் ஆடைகள் மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருக்கவேண்டும் என நினைப்பதில் ஒன்றும் பிழையில்லையே. அந்த வகையில், உலகில் மிகவும் விலையுயர்ந்த திருமண ஆடைகள் அணிந்தவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

செரினா வில்லியம்ஸ்

OruvanOruvan

Sherina villaiams bridal dress

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸூக்கும் அலெக்சிஸ் ஓஹானியனுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அழகான திருமண உடையை செரினா அணிந்திருந்தார்.

இந்த உடைக்கு 'அலெக்ஸாண்டர் மெக்குயீன்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. சாரா பர்டன் என்பவரே இந்த உடையை வடிவமைத்திருந்தார்.

இரண்டாம் எலிசபெத் ராணி

OruvanOruvan

Queen Elizabeth bridal dress

கடந்த 1947ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் ராணிக்கும் இளவரசர் பிலிப்புக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பூ வேலைப்பாடுகள், முத்துக்கள், பவளங்கள் பதிக்கப்பட்ட உடையை ராணி அணிந்திருந்தார்.

இந்த உடையின் அப்போதைய விலை 42,000 அமெரிக்க டொலர். இதன் இன்றைய மதிப்பு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த உடையை வடிவமைத்தவர் நார்மன் ஹர்ட்னெல்.

விக்டோரியா ஸ்வாரோவ்ஸ்கி

OruvanOruvan

victoria bridal dress

கடந்த 2017ஆம் ஆண்டு நகைக்கடை குடும்பத்தைச் சேர்ந்த விக்டோரியா ஸ்வாரோவ்ஸ்கிக்கும் வெர்னர் முர்ஸிற்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தின்போது 500,000 படிக கற்கள் பதிக்கப்பட்ட ஆடையை மணப்பெண் விக்டோரியா அணிந்திருந்தார். இதன் விலை ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள்.

இஷா அம்பானி பிரமல்

OruvanOruvan

isha ambani bridal dress

2018ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமலுக்கும் வெகு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மணப்பெண் அணிந்திருந்த லெஹங்கா உடையின் விலை மட்டுமே ரூபாய் 90 கோடி. இந்த உடையை வடிவமைத்தவர் அபு ஜானி சந்தீப் கோசலா.

கிம் கர்தாஷியான்

OruvanOruvan

kim kardhaashiyaan bridal dress

கர்தாஷியானுக்கும் கேன்யே வெஸ்டுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் கைகளால் வடிவைமைக்கப்பட்ட 5,00,000 அமெரிக்க டொலர் மதிப்புடைய Givenchy கவுனை கிம் அணிந்திருந்தார்.