ஜப்பான் சிக்கன்; சிக்கன் லாலிபாப்: இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்

OruvanOruvan

Chicken Recipes

பொதுவாக சிக்கன் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். காரணம் அதன் சுவை. சிக்கனைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்களை நம்மால் தயாரிக்க முடியும்.

அந்த வகையில் சிக்கனைக்கொண்டு தயாரிக்கக்கூடிய சில வித்தியாசமான ரெசிபிக்களைப் பார்க்கலாம்.

ஜப்பான் சிக்கன்

OruvanOruvan

Japan Chicken

தேவையான பொருட்கள்

 • சிக்கன் - அரை கிலோ

 • சோள மா - 2 கரண்டி

 • மைதா மா - 3 கரண்டி

 • பால் - 1/2 லீட்டர்

 • வெண்ணெய் - 3 தேக்கரண்டி

 • வெள்ளைப்பூண்டு - 3 பல்

 • சீனி - 1 தேக்கரண்டி

 • முந்திரி - 10

 • கொத்தமல்லி இலை - சிறிதளவு

 • மிளகு - 1 தேக்கரண்டி

 • பச்சை மிளகாய் - 2

 • உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிக்கன், சோள மா, மைதா மா, மிளகுத்தூள், உப்பு என்பவற்றை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிசைந்து 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள சிக்கனை போட்டு பொறித்தெடுக்கவும்.

முந்திரிப் பருப்பை மிக்ஸிஜாரில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

இதனைத்தொடர்ந்து இன்னொரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வதங்கிய பின்னர் அதில் காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் முந்திரியை சேர்த்து கிளற வேண்டும்.

பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, ஒரு தேக்கரண்டி சீனி, மிளகுத்தூள் சேர்த்து கிளறி கடைசியாக பொரித்த சிக்கனை சேர்க்க வேண்டும்.

இறுதியாக கிரேவி பதத்துக்கு வந்ததும் அதில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் ஜப்பான் சிக்கன் ரெடி.

சிக்கன் லாலிபாப்

OruvanOruvan

Chicken Lolipop

தேவையான பொருட்கள்

 • சிக்கன் துண்டுகள் - 8

 • தயிர் - 50 மில்லி

 • முட்டை - 1

 • சோள மா - ஒரு மேசைக்கரண்டி

 • எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி

 • மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

 • உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி, வெள்ளைப்பூண்டு விழுது, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு, தயிர், சோள மா, உப்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இதனைத்தொடர்ந்து சுத்தம் செய்து வைத்திருக்கும் லாலிபாப் துண்டுகளை எடுத்து ஏற்கனவே செய்து வைத்துள்ள மசாலா கலவையில் பிரட்டி எடுத்து அரை மணித்தியாலம் ஊறவைக்க வேண்டும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் சிக்கன் லாலிபாப் துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.