உங்கள் கண்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா?: அப்போ மாரடைப்பு ஏற்படலாம்
மனிதனுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் மாரடைப்பும் ஒன்று. மாரடைப்பின் காரணமாக உலகில் மில்லியன் கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.
மாரடைப்பு இந்த வயதினருக்குத்தான் ஏற்படும் என்று கூறமுடியாது.
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, இரத்தக்குழாய்களில் தேங்கி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
மேலும் புகைபிடித்தல், அதிகப்படியான உடல்பருமன், உயர் இரத்த கொழுப்பு, நீரிழிவு நோய் போன்ற காரணங்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கிறது.
பொதுவாக மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக நெஞ்சுப் பகுதியில் வலி, சுவாசிப்பதில் சிரமம் என்பவற்றைத்தான் கருதுவோம். ஆனால், மாரடைப்பு வரப்போகிறது என்பதற்கான அறிகுறிகளை கண்களும் வெளிக்காட்டும்.
இப்போது கண்களில் தெரியக்கூடிய மாரடைப்புக்கான அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்.
தெளிவாக பார்க்க முடியாமை
திடீரென எந்தவொரு பொருளையும் சரியாக பார்க்க முடியாமல் போகிறதா? பொருட்கள் அனைத்தும் மங்கலாகத் தெரிகிறதா? அப்படியானால் இதயத்திலுள்ள பிரச்சினையின் காரணமாக கண்களில் இரத்த ஓட்டம் குறைவடைந்து அதன் விளைவாக பார்க்கும் திறன் பாதிப்படைகிறது. இதனை உடனே மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும்.
கண் கூச்சம்
பிரகாசமான பொருட்களைப் பார்க்கும்பொழுது கண்கள் கூசுகிறதா? பிரகாசமான ஒளியைப் பார்க்க முடியாத அளவுக்கு கண்கள் சென்சிடிவ்வாக இருந்தால் கண்களில் இரத்த ஓட்டம் குறைவாக உள்ளதென அர்த்தம். கண்களுக்கு இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை என்றால் இதயத்தில் பிரச்சினை உள்ளது.
கண்களின் நிறமாற்றம்
நன்றாக இருந்த கண்கள் திடீரென சிவப்பு இல்லாவிட்டால் மஞ்சள் நிறத்துக்கு மாறிவிட்டதா? அப்படியானால் கண்களில் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறது. எனவே, இது இதய பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.
கண்களில் வீக்கம்
கண்களைச் சுற்றியுள்ள பகுதி வீங்கியுள்ளதா? அப்படியானால் இதயத்திலுள்ள பிரச்சினையின் காரணமாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் நீர் தேங்கி அது வீக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
கண் இமை தொங்குதல்
உங்கள் கண் இமைகள் இரண்டும் தொங்கினால் அது மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். ஏனென்றால் கண் இமை தசைகளில் இரத்த ஓட்டம் குறைவடையும்போது அப்பகுதியில் உள்ள தசைகள் வலுவிழந்து தொங்க ஆரம்பிக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
அசௌகரியம்
மணிக்கணக்கில் கணினியின் முன் வேலை செய்பவர்கள், கண்களில் வலியோ அல்லது அசௌகரியமோ ஏற்பட்டால் அது கணினி பாவனையினால்தான் என நினைத்து அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஆனால், கண்களில் அதிகப்படியான அழுத்தம், இரத்த ஓட்டம் குறைதல் போன்ற காரணங்களினாலும் அசௌகரியம் ஏற்படலாம். இது மாரடைப்பின் அறிகுறியாக உள்ளது.
இவை கண்கள் நமக்கு வெளிக்காட்டும் மாரடைப்புக்கான அறிகுறிகள்.
முடிந்தவரையில் நாம் மாரடைப்பை தடுப்பதற்கு சில விடயங்களைப் பின்பற்றலாம்.
மாரடைப்பை தடுக்கும் உணவுகள்
கீரைகள், பச்சை காய்கறிகள், முட்டைக்கோஸ், முழு தானியங்கள், ஒமேகா 3 அமிலம் நிறைந்த உணவுகள், வால்நட், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு இவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மன அழுத்தம்
தற்போதைய வாழ்க்கை சூழலில் மன அழுத்தத்தை கையாள்வது கடினம்தான். எனினும் யோகா, உடற்பயிற்சிகள், தியானம், சரியான உறக்கம், புத்தகம் வாசித்தல், இசை கேட்டல் போன்ற மனதுக்கு நிம்மதியளிக்கும் விடயங்களை செய்வது மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவும்.
சுறுசுறுப்பாக இருங்கள்
உடலுக்கு பயிற்சி கொடுங்கள். அதாவது, ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்யுங்கள். இது நமது இதயத்தின் நலனைக் காக்கும்.
மது,புகைத்தல்
மது மற்றும் புகைப்பழக்கம் அனைத்து நோய்களுக்குமான முதல் காரணியாக உள்ளது. இந்தப் பழக்கவழக்கம் இதயம் பாதிக்கப்பட்டுள்ள அறிகுறிகள் வெளியில் தெரிவதற்கு முன்பே இதயத் தசைகளை சேதப்படுத்தியிருக்கும்.
மருத்துவ பரிசோதனை
மாதத்துக்கு ஒரு தடவையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். உங்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணம் உங்களுக்கு தெரியவில்லை என்றால், அது வாயுத்தொல்லையாக இருக்கும் என அலட்சியமாக விட்டுவிடாது மருத்துவரிடம் கலந்துரையாட வேண்டும். பின்னாளில் அது மாரடைப்பு ஏற்படவும் காரணமாகிவிடும்.