உங்கள் கூந்தல் தரையைத் தொட வேண்டுமா?: இவற்றை கடைபிடியுங்கள்

OruvanOruvan

Hair fall problems

கூந்தல் உதிர்வு பிரச்சினை ஆண்,பெண் என இருபாலருக்குமே உண்டு. ஆண்கள் என்றால் வழுக்கை விழுதல் பெண்கள் என்றால் முடி உதிர்ந்து அடர்த்தி குறைதல், தலைவகிடு பெரிதாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

முடி உதிர்தலுக்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. உடல், உள பிரச்சினைகளும் அவற்றுள் அடங்கும்.

என்ன காரணத்துக்காக தலைமுடி உதிர்கிறது?

முடி சுத்தமின்மை - தலையிலுள்ள அசுத்தங்களை தேய்த்து குளிக்காமல் விட்டாமல் முடி உதிரும்.

பொடுகு - தலையில் பொடுகு இருந்தால் நிச்சயமாக முடி உதிர ஆரம்பிக்கும்.

தலைமுடி சீவும் முறை - தலைமுடியை நாம் சீவும் விதமும் முடி உதிர்தலுக்கு ஒரு காரணியாக உள்ளது. நீளமான கூந்தலை உடையவர்கள் முடியை சிக்கில்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

விட்டமின் குறைபாடு - உடலுக்கு தேவையான அளவு விட்டமின்கள் இல்லாவிட்டாலும் முடி உதிர்தல் ஏற்படும்.

தண்ணீர் - அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதாலும் முடி உதிர்வு ஏற்படும். தண்ணீரில் உப்பு அதிகமானாலும் முடி உதிரும்.

OruvanOruvan

Hair fall problems

முடி வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் என்ன?

நெல்லிக்காய் - இது ஒட்சிசனேற்ற பண்பைக் கொண்டது. நரை முடி, பொடுகு பிரச்சினைக்கு தீர்வு தரும். வாரம் இரண்டு தடவை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கலாம்.

பாதாம்/ வால்நட் - விட்டமின் ஈ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஒட்சிசனேற்ற பண்புகள் அதிகம் உண்டு. தினமும் காலையில் 5 பாதாமும் 1 வால்நட்டும் உண்ண வேண்டும்.

வேர்க்கடலை - விட்டமின் ஈ, மெக்னீசியம், துத்தநாகம், பயோட்டின் போன்றவை இதில் உள்ளடங்கியுள்ளன. வேர்க்கடலையை இரவில் ஊறவைத்து அதை அவல், உப்பு மா போன்றவற்றில் சேர்த்து உண்ண வேண்டும்.

கறிவேப்பிலை - இரும்புச்சத்து, போலிக் அமிலம் நிறைந்தது. 3 முதல் நான்கு கறிவேப்பிலை இலைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் மென்று உண்ண வேண்டும்.

வெந்தயம் - பைட்டோ எஸ்ட்ரோஜன் நிறைந்தது. ஒரு டம்ளர் தண்ணீருடன் ஊறவைத்து அரைத்த வெந்தயத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ளரிக்காய் - சல்பர், சிலிக்கான் ஆகியவை நிறைந்தது. கொத்தமல்லி, புதினா என்பவற்றுடன் வெள்ளரிக்காய் ஸ்மூத்தி செய்து சாப்பிடலாம்.

OruvanOruvan

Hair fall problems

முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் எண்ணெய் எப்படி தயாரிக்கலாம்?

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை

  • கடுகு எண்ணெய்

  • வெந்தயம்

  • ரோஸ்மேரி இலை

  • பாதாம் எண்ணெய்

  • விளக்கெண்ணெய்

எவ்வாறு செய்யலாம்?

முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை ஊற்றி அதை நன்றாக சூடுபடுத்த வேண்டும். பின்னர் அதில் கறிவேப்பிலை, வெந்தயம், ரோஸ்மேரி என்பவற்றைச் சேர்த்து நிறம் மாறும் வரையில் வறுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து எண்ணெய் சூடு தணிந்ததும் போத்தலில் ஊற்றி வைக்க வேண்டும். இதில் பாதாம் மற்றும் விளக்கெண்ணெய் சமமான அளவில் இருக்க வேண்டும்.

OruvanOruvan

Hair fall problems

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய் - 1 கப்

  • ஆலிவ் எண்ணெய் - 1 கப்

  • கறிவேப்பிலை - 1 கப்

  • சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்

  • வறுத்த வெந்தய விதைகள் - 1/4 கப்

  • வறுத்த கருஞ்சீரகம் - 1/4 கப்

செய்முறை

முதலில் வெந்தையத்தையும் கருஞ்சீரகத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எணணெயை ஊற்றி சூடாக்கவும்.

சூடாக்கிய எண்ணெய் கலவையில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகப் பொடியைச் சேர்க்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.

அனைத்தையும் சேர்த்தவுடன் குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.

எண்ணெய் நிறம் மாறத் தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிடவும்.

ஒரு துணியைக் கொண்டு எண்ணெயை வடிகட்டிக் கொள்ளவும்.

நன்றாக ஆறியதும் ஒரு போத்தலில் சேமித்து வைக்கவும்.