ஒருவர் பொய் கூறுவதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?: இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க
நம்மிடம் பழகும் நபர்கள் அனைவருமே நம்மிடம் உண்மையை மட்டும்தான் பேசுகிறார்கள் என்று கூறமுடியாது.
அந்த வகையில் ஒரு நபர் உங்களிடம் பொய் சொல்கிறார் என்றால், அதை அவரது சில உடல்மொழிகளை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.
மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சொல்
உங்களுக்கு எதிரே இருப்பவர்கள் உங்களுடன் பேசும்போது அவர்கள் ஒரே வார்த்தையை அல்லது சொற்றொடரை மீண்டும் மீண்டும் சொன்னால், அவர்கள் உங்களிடம் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.
பேசும் விதத்தில் மாற்றம்
ஒருவர் வழமையாக பேசும் விதத்தைப் பார்க்கிலும் சத்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அவர்கள் உங்களிடம் ஏதேனும் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.
தெளிவற்ற பேச்சு
பேசும்போது சில விஷயங்களை தவிர்த்தல், அல்லது மாற்றி மாற்றி பேசுவதை வைத்தே அவர் உங்களிடம் பொய் சொல்கிறார் என்று அர்த்தம்.
கேட்காமலே பேசுதல்
நீங்கள் கேட்காமலேயே ஒருவர் உங்களிடம் தானாக வந்து தேவையற்ற விடயங்களைப் பேசினால் பெரும்பாலும் அந்த நபர் உங்களிடம் பொய் கூறுகிறார் என்று அர்த்தப்படும்.
அதிகமாக சிந்தித்து பேசுதல்
ஒருவர் உண்மையைப் பேசுகிறார் என்றால் அவர் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சரளமாக பேசுவார். ஆனால், அதுவே பொய் சொல்பவர்களாக இருந்தால் அடுத்து என்ன பொய் கூறலாம் என்பதை யோசித்து யோசித்து பேசுவார்கள்.
குறுக்கு கேள்விகள் கேட்டால் குழம்புதல்
ஒருவர் நம்மிடம் பேசும்போது அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால், அவரிடம் குறுக்கு கேள்விகள் கேட்கலாம். இவ்வாறு கேள்வி கேட்கும்போது அவர் முதல் கூறியதிலிருந்து ஏதேனும் மாறிக்கூறினால் அவர் பொய் கூறுகிறார் என்று தெரிந்துவிடும்.
அதிகமான தகவல்களைக் கூறுதல்
உங்களிடம் பேசுபவர்கள் நீங்கள் கேட்காமலேயே அதிகமான தகவல்களை அடுக்கிக்கொண்டே போனால் அவர் உங்களிடம் பொய் கூறுகிறார் என்று அர்த்தம்.