நீரிழிவு நோய் சாதாரணமானது அல்ல: பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்

OruvanOruvan

Diabetic

நீரிழிவு நோய் என்றால் என்ன?

ஒருவருடைய உடலானது இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகின்ற நோய் நிலையே நீரிழிவு.

நீரிழிவு நோயின் அறிகுறிகள் என்ன?

  • அதிகப்படியான சோர்வு

  • தாகம் அதிகமாக எடுத்தல்

  • திடீரென எடை குறைதல்

  • கண் பார்வை மங்குதல்

  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்

OruvanOruvan

Diabetic

நீரிழிவு நோயாளிகள் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்?

நீரிழிவு நோயாளிகள் மருந்துகளில் நோயைக் குணப்படுத்துவதைப் பார்க்கிலும் உணவில் கட்டுப்பாடுடன் இருப்பது சிறந்தது.

அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், மிளகு, தக்காளி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பழங்களில் அப்பிள், வாழைப்பழம் என்பவை சிறந்தவை.

பிரவுன் ரைஸ், ஓட் மீல், தானிய ரொட்டிகள், தயிர், பால் என்பவற்றையும் அசைவ உணவுகளில் மீன்,கோழி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றையும் உண்ணலாம்.

கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கு தரும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருக்கின்றன. அதுமட்டுமின்றி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியத்துக்கு நன்மையளிக்கும் பொருட்கள் அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அசைவ உணவுகளில் என்ன உண்கிறோம் என்பதை விட எந்த முறையில் உண்கிறோம் என்பதே முக்கியம்.

OruvanOruvan

Diabetic

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?

நிறைவுற்ற கொழுப்பு, சர்க்கரை கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அதாவது, சர்க்கரை பானங்கள், மிட்டாய், பிஸ்கட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

OruvanOruvan

Avoid food Diabetic

ஏனைய நோய்கள்

நீரிழிவு நோயை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உலகில் 90 சதவீதமான மக்கள் இந்த நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பரம்பரை மூலமாகவும் நாம் உண்ணும் உணவு முறையின் மூலமாகவும்தான் ஏற்படும்.

இந்த நீரிழிவு நோயானது கூடவே, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், பார்வை இழப்பு, கோமா, இறப்பு போன்ற பாதிப்புக்களையும் ஏற்படுத்தக்கூடும்.

OruvanOruvan

Diabetic