கணவன்-மனைவி இடையே எத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் தெரியுமா: புதைந்து கிடக்கும் அறிவியல்
“திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” என்ற கூற்றுக்குள் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றது.
அனைத்துக் காலத்திலும், பிரச்சினைகளை சமாளித்து வாழ வேண்டும் என்ற அர்த்தத்தில் தான் “திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” என நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
திருமணமான ஜோடி வாழ்நாள் முழுவதும் அதே அன்புடன் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்குள் வயது வேறுப்பாடு இருக்க வேண்டும் என்று மூதாதையர்கள் கணித்துள்ளனர். அது இன்றைய காலத்தில் சாத்தியம் இல்லை என்றாலும் அவர்களின் கனிப்புக்கு பின்னால் என்ன காரணம் இருக்கும் என்று பார்க்கலாம்.
மூதாதையரின் நம்பிக்கை
ஒரு உறவு நிலைத்திட காதல் என்பது இன்று அவசியம் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், கணவன்-மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிர்ணயிப்பதாக முன்னோர்கள் கருதினார்கள்.
பொதுவாக திருமண பந்தத்தில் மணமகனை விட, மணமகளின் வயது குறைவாக இருக்க வேண்டும் என காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்தது.
ஒரு காலத்தில் திருமண பந்தத்தில் ஈடுபட இருக்கும் ஆணை விட பெண்ணுக்கு 5 அல்லது 6 வயது வரை குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தர்.
அதற்கும் முன்னர் 10 முதல் 15 வயது வரை கூட வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொடுத்ததும் உண்டு.
ஆனால், இன்று வயது குறைந்த ஆண்களை பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் வெற்றி ஜோடிகளாக மாறியும் இருக்கின்றார்கள்.
உதாரணத்திற்கு கூறப்போனால் மூத்த கிரிக்கெட் வீரர் சச்சினின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் அவரை விட நான்கு வயது மூத்தவர்.
திருமண பந்தத்தில் ஆணை விட பெண்ணின் வயது குறைவாக இருக்க வேண்டுமா அல்லது பெண்ணை விட ஆண் குறைந்த வயதுடன் இருக்க வேண்டுமா, இருவருக்கும் ஒரே வயது இருந்தால் நல்லதா என பல்வேறு சந்தேகங்கள் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.
இந்த காலத்தில் வயது திருமணத்திற்கு தடையில்லை. ஆனால், எமது மூதாதையர் பெண்களை விட ஆண்களுக்கு வயது அதிகம் இருக்க வேண்டும் என்று கணிக்க ஆண்கள் வலிமையானவர்கள் என்று கருதியமை ஒரு காரணம்.
பெண்களுக்கு சிறந்த அன்பையும், பாதுகாப்பையும் தன்னை விட வயதில் மூத்த ஆணினால் வாழ்நாள் முழுவமும் கொடுக்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது.
புதைந்து கிடக்கும் அறிவியல்
அறிவியலின் படி இந்த விடயத்தினை பார்த்தால், ஆண் மற்றும் பெண் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் போது, அவர்கள் உடலுறவு கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
ஏழு முதல் 13 வயது வரையிலான பெண்களில் இந்த மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது.
அதேசமயம் ஆண்களில் இந்த மாற்றம் 9 முதல் 15 வயதுக்குள் ஏற்படுகிறது. அதாவது ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஹார்மோன் மாற்றம் விரைவில் நிகழ்கிறது.
இதன் காரணமாக, ஆண்களை விட அவர்கள் விரைவில் உடல் ரீதியான உறவைப் பெற தகுதியானவர்களாக மாறுகிறார்கள்.
அதுதான் வயது குறைவான பெண்களை வயது கூடிய ஆண்களுக்கு முன்னோர்கள் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
இன்றைய காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது திருமண உறவில் தாம்பத்திய உறவு ஒரு பகுதி மட்டுமே.
இதைத் தாண்டி, சம்பந்தப்பட்ட தம்பதியரைப் பொறுத்து எத்தனை எத்தனையோ உணர்வுரீதியான பகிர்தல்கள் இருக்கும். அவையெல்லாம் சரியாக இருந்தால், வயது வித்தியாசம் ஒரு விஷயமே கிடையாது.
உலகின் பல நாடுகளில் உடலுறவுக்கான குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது சட்டப்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெண் குழந்தைகளின் வயது 18 ஆகவும், ஆண் குழந்தைகளின் வயது 21 ஆகவும் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கணவன்-மனைவியின் வயதில் மூன்று வருட இடைவெளி சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சட்டங்களை தாண்டி இன்று எல்லாவற்றிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்களாக இருக்கின்றார்கள். இன்றைய காலத்தில் ஆண்கள் ஆண்களையும், பெண்கள் பெண்களையும் திருமணம் செய்வதை கூட சட்டம் அனுமதிக்கின்றது.
இப்படி இருக்க மூதாதையர்களின் கணிப்பு கேள்வி குறியே.