நாவில் எச்சில் ஊறவைக்கும் க்ரீன் டீ ஐஸ்க்ரீம்: எளிதாக செய்து அசத்தலாம்

OruvanOruvan

Green tea icecream

பொதுவாகவே க்ரீன் டீ என்பது உடலுக்கு ஆரோக்கியமானது. அந்த வகையில் க்ரீன் டீயை வைத்து எப்படி ஐஸ்க்ரீம் செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • க்ரீன் டீ தூள் - 20 கிராம்

  • பால் (கொழுப்பு நீக்காதது) - 400 மில்லி

  • முட்டை - 6

  • ப்ரஷ் க்ரீம் - 300 மி.லி

  • கஸ்டர்ட் சுகர் - 1/2 கப்

OruvanOruvan

Green tea ice cream

செய்முறை

முதலில் அடி கனமான பாத்திரமொன்றில் ப்ரஷ் க்ரீம், பால் என்பவற்றை ஊற்றி மிதமான சூட்டில் கலக்க வேண்டும்.

இலேசாக சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இன்னொரு பாத்திரம் எடுத்து அதில் கஸ்டர்ட் சுகர், முட்டை என்பவற்றை ஊற்றி நன்றாக அடித்து கலக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் க்ரீன் டீ தூளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதற்கடுத்ததாக, காய்ச்சி வைத்திருந்த பாலை இதில் ஊற்றி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். இந்த கலவையை வடிகட்டி, அகன்ற பாத்திரமொன்றில் ஊற்றி மிதமான தீயில் கிளற வேண்டும்.

கலவை கெட்டியாகத் தொடங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவேண்டும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

சரியாக ஒரு மணித்தியாலம் கழித்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியிலெடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அடித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை மீண்டும் பவுலில் ஊற்றி ப்ரீசரில் வைக்க வேண்டும்.

2 மணி நேரத்தின் பின்னர் அதனை வெளியே எடுத்தால் வித்தியாசமான க்ரீன் டீ ஐஸ்க்ரீம் தயார்.

OruvanOruvan

Green tea ice cream