ஆண்களே! நீங்கள் இப்படியிருந்தால் பெண்களை எளிதில் கவர்ந்துவிடலாம்: அப்படி என்னவா இருக்கும்
காலம் காலமாக ஆண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், தனக்கு பிடித்த பெண்ணை கவர்வதில் இருக்கும் சிக்கல்தான்.
ஆனால், பெண்களை கவர்வது என்பது அவ்வளவு கடினமான காரியமல்ல.
இனி பெண்களைக் கவர்வதற்கான வழிகள் என்னவென்று பார்ப்போம்.
கேட்பது, கேட்டுக்கொண்டிருப்பது
தான் சொல்வதைச் செவிகொடுத்து கேட்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். கேட்பது மட்டுமல்லாமல் பேசும் திறனும் சமநிலையில் இருக்க வேண்டும்.
சுத்தமாக இருக்க வேண்டும்
ஒரு ஆண் தான் நேசிக்கும் பெண்ணைக் கவர வேண்டுமென்றால், அவரும் அவரைச் சூழவுள்ள இடமும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். வெறுமனே பெண்களைப் பார்க்கப்போனால் மாத்திரமே இருக்கும் வாசனைத் திரவியங்கள் அனைத்தையும் போட்டுக்கொண்டு செல்லாமல் இயல்பாகவே சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
சிரிப்பும் சிந்தனையும்
பொதுவாகவே பெண்களுக்கு நன்றாக சிரிக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும். அதற்காக ஜோக்கரைப் போலல்லாமல் தேவையான இடத்தில் சிரிப்பும் சிந்திக்க வேண்டிய இடத்தில் சிந்திக்கவும் தெரிந்த ஆணாக இருக்க வேண்டும்.
தாடி வைத்திருக்கும் ஆண்கள்
தாடி வைக்காத ஆண்களை விட தாடி வைத்த ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். இது ஆண்களை கவர்ச்சியானவர்களாக காட்டும்.
ஆரோக்கியம்
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் கழுவுதல், ஜிம்முக்குச் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருத்தல், தாடியை நேர்த்தியாக வைத்திருத்தல் போன்றன பெண்களுக்கு பிடித்த ஆரோக்கிய பழக்கவழக்கங்களாக இருக்கிறது. ஒரு ஆணைப் பார்த்தவுடனேயே பெண்ணால் அவர் எப்படிப்பட்ட ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பவர் என்பதை கண்டுகொள்ள முடியும்.
சமைக்கவும் வேண்டும், சமைத்தவற்றை கழுவவும் வேண்டும்.
பொதுவாகவே பெண்கள் நன்றாக சமைக்கக்கூடியவர்கள். அதுவே ஆண்கள் சமைத்தால் அது பெண்களை அதிகமாக கவரச் செய்யும்.