பட்டுப்போன்ற கூந்தலுக்கு உதவும் இளநீர்: இனி இப்படி செய்து பாருங்க

OruvanOruvan

Coconut Water For Hair

உடல் சூடாக இருக்கும்பட்சத்தில் உடல் சூட்டை தணிப்பதற்காக இளநீர் வாங்கிக் குடிப்போம். இப்படி உடலை குளிர்ச்சியாக வைக்கக்கூடிய பானங்களில் இளநீரும் ஒன்று.

இளநீரில் 95% நீர், 4% கார்போஹைட்ரேட்,புரதம் மற்றும் கொழுப்பு 1%, விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சிறிய அளவிலும் உள்ளன.

இளநீர் உடலுக்கு மட்டுமில்லாமல் கூந்தல் பராமரிக்கும் மிகவும் உகந்தது.

இனி கூந்தலுக்கு இளநீரை ஹேர் வோஷ்ஷாக பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

OruvanOruvan

Coconut Water For Hair

மென்மையாக இருக்கும்

இளநீரை உச்சந்தலையில் பயன்படுத்துவதனால் கூந்தல் மென்மையாக மாறும். தலையில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றுக்கும் இளநீர் நல்லதொரு தீர்வாக அமையும்.

நீர்ச்சத்து

இளநீரில் உள்ள தாதுக்கள், விட்டமின்கள், எலக்ட்ரோலைட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலைக்கும் முடிகளுக்கும் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கும். இதனால் கூந்தல் வறட்சி அடையாது, பொடுகு பிரச்சினை இருக்காது.

OruvanOruvan

Coconut Water For Hair

கூந்தல் பிரகாசிக்கும்

பொதுவாகவே இளநீரில் நீரேற்ற பண்புகள் உள்ளன. இதனால், இளநீரை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் பொலிவிழந்த முடியை பளபளப்பாக மாற்றலாம்.

முடி வளரும்

இளநீரில் உள்ளடங்கியுள்ள பொட்டாசியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதனை ஹேர் வோஷாக பயன்படுத்தும்போது மயிர்க்கால்கள் வலுவாகி ஆரோக்கியமான முடி வளரும்.

OruvanOruvan

Coconut Water For Hair

வாசம்

இளநீரை கூந்தலில் பயன்படுத்தும்போது அது இனிமையான நறுமணத்தை வழங்குகிறது.

இயற்கையான கண்டிஷனர்

கூந்தலில் ஏற்படும் சிக்கல்கள், முடிச்சுக்களை நீக்க உதவுகிறது. எனவே சுருள் முடி, அடர்த்தியான முடி இப்படி எல்லா வகை முடிகளுக்கும் இளநீர் சிறந்த தீர்வாக அமைகிறது.

OruvanOruvan

Coconut Water For Hair

மேற்கூறிய அனைத்துவிதமான கூந்தல் பிரச்சினைகளுக்கும் இளநீர் சிறந்ததொரு தீர்வாக அமையும்.