ராஜநாகத்துக்கும் - நாகப்பாம்புக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள்: இவ்ளோ இருக்கா

OruvanOruvan

King cobra vs cobra

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அவ்வாறு பாம்புக்கு பயப்படாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த வகையில் ராஜ நாகத்துக்கும் (King cobra) நாகப்பாம்புக்கும் இடையில் என்னென்ன வித்தியாசம் இருக்கின்றது எனப் பார்ப்போம்.

  • ராஜ நாகம் 8 கிலோ எடையும் 19 அடி நீளமும் கொண்டிருக்கும். நாகப் பாம்பு 3 கிலோ எடையும் 7 அடி நீளமும் கொண்டது.

  • ராஜ நாகங்கள் பழுப்பு அல்லது ஆலிவ் பச்சை நிறத்தில் வெளிர் மஞ்சள் நிற கோடுகள் மற்றும் கறுப்பு தலையுடன் இருக்கும். ஆனால், நாகப் பாம்புகள் நிறம் மாறக்கூடியது. பெரும்பாலும் பழுப்பு, சாம்பல், கறுப்பு நிறங்களில் இருப்பதோடு அதன் தலையின் பின்புறத்தில் ஒரு அடையாளமும் இருக்கும்.

OruvanOruvan

King cobra

  • ராஜநாகமானது ஒரே நேரத்தில் 11 பேரைக் கொல்லும். அதேபோல் நாகப்பாம்பு ஒரே நேரத்தில் 10 பேரைக் கொல்லக்கூடியது. ஒவ்வொரு வருடமும் சுமார் 15000 பேரைக் கொல்லும் இந்த நாகப்பாம்பை 'கொலையாளி பாம்பு' என்றும் அழைக்கின்றனர்.

  • ராஜநாகம் எதிரிகளை கடிக்கும்பொழுது 1000 மில்லிகிராம் விஷத்தை கக்கும். ஆனால், நாகப்பாம்பு 250 மில்லிகிராம் விஷத்தையே கக்குகிறது.

  • ராஜ நாகத்தின் பற்கள் 0.5 அங்குல நீளத்துடன் மனித பற்களுக்கு சமமாக இருக்கும். நாகப்பாம்பின் பற்கள் 0.3 அங்குலம் நீளம் கொண்டது.

OruvanOruvan

cobra

ராஜ நாகம் - நாகப்பாம்பு இடையில் சண்டை நடந்தால் ராஜ நாகத்துக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம். ஏனென்றால் ராஜ நாகம் மிகவும் பெரியது மற்றும் அதிக சக்தி வாய்ந்தது.

எது எவ்வாறெனினும் ராஜநாகம் - நாகப்பாம்பு இரண்டும் ஒன்றையொன்று கடித்துக்கொண்டால் இரண்டின் விஷமும் ஒன்றையொன்று கொன்றுவிடும்.