BRA என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? 15 வருட ஆய்வு ; தூங்கும் போது அணியலாமா ?: பெண்களுக்கே தெரியாத தகவல்

OruvanOruvan

Breast Resting Area

பெண்களுக்கு மார்பகங்கள் ஒரு முக்கியமான உடல் உறுப்பு, எனினும் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் முக்கியத்தும் மார்பகங்களுக்கு அளிக்கப்படுவதில்லை.

மார்பகத்தில் நாம் எந்த பிரச்சினைகளையும் உணரவில்லை என்றாலும் கூட சிறப்பு கவனம் தேவை.

பொதுவெளியில் பெண்கள் கேள்வி கேட்க தயங்கும் உள்ளாடைகள் குறித்து தான் இன்று பார்க்க போகிறோம்.

ப்ரா(BRA) தொடர்ந்து, அணியலாமா.. கூடாதா.. போன்ற பல கேள்விகள் பெண்களிடையே இருக்கிறது.

பெரும்பாலான பெண்களுக்கு ப்ரா ஒரு அசௌகரியம் தரும் உள்ளாடைதான். இருப்பினும் அதை சகித்துக்கொண்டு அணிகின்றார்கள்.

OruvanOruvan

Breast Resting Area

15 வருட ஆய்வு

ஜீன் டெனிஸ் ரௌலியன் என்ற ஆய்வாளர் 15 ஆண்டுகளாக பெண்கள் ப்ரா அணிவது நல்லதா, கெட்டதா என நீண்ட ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆய்வின் முடிவில் , ப்ரா அணிவதால் பெண்களின் மார்பகங்களுக்கு கூடுதல் நன்மை எதுவும் ஏற்படுவதில்லை என்றும், மாறாக தீய விளைவுகள் தான் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பல பெண்கள் ப்ரா அணிவதற்கு காரணம் மார்பங்களை தொங்கிவிடக் கூடாது, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.

இப்போது ப்ராக்களில் பல வகைகள் வந்துவிட்டன. இவை எல்லாம் பெண்களை மூளை சலவை செய்து வைக்கும் பணியாகும்.

உண்மையில், ப்ரா அணிவதால் தான் மார்பகங்கள் அதிகம் தொங்கும் நிலை கொல்கிறது என்றும், பெண்களின் மார்பகங்கள் தொங்கும் நிலை அடைவதற்கு வேறு சில காரணங்கள் தான் இருக்கின்றன எனவும் ஆராச்சியில் உறுதி செய்துள்ளனர்.

OruvanOruvan

Breast Resting Area

பொதுவாக மார்பகங்கள் தளர்வடைதல் என்பது வயது செல்ல செல்ல இயற்கையாக நிகழக்கூடியது.

அதை ப்ரா அணிவதால் தடுக்கமுடியாது. அதேபோல் பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்களுக்கும் பிரா அணிவது சௌகரியத்தை தரும். இரவு புரண்டு படுக்கும்போது அவை அதிக வலியை தரலாம்.

எனவே, இரவு படுக்கும்போது ப்ரா அணியலாமா என்பது ஆய்வுகள் செய்தாலும் கண்டறிய முடியாது. ஏனெனில் அது அவரவர் விருப்பம் மற்றும் சௌகரியத்தைப் பொருத்தது.

எதுவாயினும் சரியான அளவிலான ப்ராக்களை அணியுங்கள். இறுக்கமான ப்ரா அணிவது வேறு ஏதேனும் பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.

OruvanOruvan

Breast Resting Area

இரவு தூங்கும் போது ப்ரா அணியலாமா?

தூங்கும் போது ப்ரா அணிவது இரத்த ஓட்டத்தை தடை செய்யும், குறிப்பாக, இறுக்கமான மீள் கம்பியுடன் கூடிய ப்ராவை அணிந்திருந்தால் நிலை இன்னும் மோசமாகும்.

நாள் முழுவதும் ப்ரா அணிந்திருக்கும் பெண்கள் தூங்கும் போதும் அப்படியே தூங்கினால் மென்மையான தோலில் கீறல் மற்றும் புண் உண்டாகலாம்.

எனவே தூங்கும் போது ப்ராவை தவிர்ப்பது நல்லது. இரவில் தூங்கும் போது இறுக்கமான ப்ரா அணிவது அசௌகரியத்தை மட்டும் இல்லை, தூக்கத்தின் தரத்தையும் கூட பாதிக்கலாம்.

நல்ல தூக்கம் இல்லாதது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். கோடையில் தூங்கும் போது ப்ரா அணிவது அதிக வியர்வையை உண்டாக்கும்.

இரவு நேரங்களில் தொடர்ந்து ப்ரா அணிவதால் மார்பகங்களில் கட்டிகள் மற்றும் நீர்க்கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.

OruvanOruvan

Breast Resting Area

குறிப்பாக சொல்லப்போனால் ப்ரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் ஆடைதான்.

அதேபோல் ப்ரா அணிவதும், அணியாமல் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம்.

பல பெண்கள் ப்ரா அணிவதால் மார்பகங்களை எடுப்பாக காட்ட முடியும் என்று நினைக்கின்றனர். அதோடு வெளியே தெரியும் முளைக்காம்புகளை மறைப்பதற்கும் பிரா அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

முக்கியமாக கூறவேண்டும் என்றால் உங்களுக்கு வியர்க்கவில்லை என்றால் கூட ப்ராவை அடிக்கடி துவைத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரே ப்ராவை இரண்டு மூன்று நாட்கள் பயன்படுத்தக் கூடாது. ஒரு ப்ராவை ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். துணிகளை சேதப்படுத்தாத சோப்புக் கொண்டு ப்ராவை துவைத்து உலர வைத்து பயன்படுத்துங்கள்.

OruvanOruvan

Breast Resting Area

BRA என்பதன் விளக்கம்

பெண்களின் உடையில் மிக முக்கியமாக மாறி விட்ட ப்ரா என்பது பிரெஞ்சு வார்த்தை. இந்த வார்த்தை பிராசியர் என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பது சுவாரஷ்யமான உண்மை.

1893இல் நியூயார்க்கில் உள்ள ஈவினிங் ஹெரால்ட் பத்திரிகையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். கடந்த 1904ல் அவர் மிகவும் பிரபலமானார்.

அதற்குப் பிறகு, 1907ல், வோக் பத்திரிகை முதன்முதலில் பிராசியர் என்ற வார்த்தையை அச்சிட்டது.

அதன் பிறகு, இந்த வார்த்தை பரவியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இது ஒக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் சேர்க்கப்பட்டது.

'Breast Resting Area' என்பது தான் BRA என்பதன் விளக்கம். அதாவது மார்புப்பகுதி ஓய்வெடுக்கும் பகுதி என்பதே தமிழ் அர்த்தம்.

OruvanOruvan

Breast Resting Area

எப்படி ப்ரா அளவை தெரிவு செய்வது?

முதலில் ஒரு அளவு டேப்பினை எடுத்து உங்களது மார்பிற்கு கீழ்ப் பகுதியை சுற்றி அளவு எடுத்துக் கொள்ளவும். இதுவே இறுதியான அளவு இல்லை.

பின் அதனுடன் ஒரு நான்கு இஞ்சினை கூட்டிக் கொள்ளவும். அதாவது 32 இஞ்ச் என்று வந்தால் 36 என்று வைத்துக் கொள்ளவும்.

இது 32,34, 36 என அதன் அளவு இரட்டை படை எண்களில் இருக்கும்.

ஒருவேளை அளவு ஒற்றைப் படை எண்ணில் வந்தால் அதன் அடுத்த இரட்டை படை எண்ணை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஐந்துடன் கூட்டிய எண் 43 என வந்தால் அதன் அடுத்த எண்ணான 44 அளவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தற்போது இதுதான் பிராவின் சுற்றளவு.

OruvanOruvan

Breast Resting Area

அடுத்ததாக கப் சைஸ் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த கப் சைஸ் என்பது எண்ணிக்கையில் அல்லாமல் எழுத்தாக A,B,C,D என வரும்.

இதற்கு இஞ்ச் டேப்பை மார்பகங்களின் மேல் வைத்து அளவு எடுக்க வேண்டும். அந்த அளவு 40 என வந்தால் அதை மார்பக சுற்றளவுடன் கழிக்க வேண்டும். உதாரணத்திற்கு கப் அளவு 40 - சுற்றளவு 44 கழித்தால் 4 வரும். இந்த நான்கு என்பது Dயைக் குறிக்கும். எனவே கப் அளவு D கப்.

தற்போது ப்ரா வாங்கும்போது சுற்றளவு மற்றும் கப் சைஸ் இரண்டையும் சேர்த்து கேட்க வேண்டும். அதாவது ப்ரா சைஸ் 44 கப் சைஸ் D என கேட்டு வாங்க வேண்டும்.

இப்படி உங்களின் மார்பக சுற்றளவு, மார்பக அளவு எவ்வளவு வருகிறது என இஞ்ச் டேப் பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்.