இளமையான தோற்றம் வேண்டுமா: கொய்யா இலையை இப்படி பயன்படுத்துங்க

OruvanOruvan

Guava leaf

கொய்யாப்பழம் உண்பது உடலுக்கு எவ்வளவு நன்மையைக் கொடுக்குமோ, அதேயளவு நன்மையை கொய்யா இலை சருமத்துக்கு கொடுக்கிறது.

இனி சருமப் பிரச்சினைகளுக்கு கொய்யா இலையை எவ்வாறு பயன்படுத்தலாம் எனப் பார்ப்போம்.

  • கொய்யா இலைகளை அரைத்து முகத்துக்கு மசாஜ் செய்வதன் மூலம் முகப்பரு, முகச் சுருக்கங்கள், வயதான தோற்றம் என்பவற்றை தவிர்க்கலாம்.

  • எண்ணெய் சருமம் கொண்டவர்கள், கொய்யா இலைகளை பேஸ்ட் போல் அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி அரை மணித்தியாலம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

  • முகத்தில் நமைச்சல், ஒவ்வாமை பிரச்சினை ஏறபடும் சந்தர்ப்பங்களில் கொய்யா இலைகளை நன்கு அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

  • கொய்யா இலையை அரைத்து, அதனுடன் முல்தானிமெட்டி, ரோஸ் வோட்டர் கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது சருமத்தில் அழுக்கு படிவது தவிர்க்கப்படும்.

  • சருமம் கருமையடையத் தொடங்கினால் கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வோட்டர் கலந்து முகத்தில் பூசினால் முகத்திலுள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

  • பொடுகு பிரச்சினையில் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை தலையில் தேய்த்து குளித்து வரலாம்.

OruvanOruvan

Guava leaf