அருமையான சுவையில் முட்டை சீஸ் ரோல்: செய்து பாருங்கள்

OruvanOruvan

Bread Egg cheese roll

அனைவரையும் சாப்பிடத் தூண்டும் முட்டை சீஸ் ரோல் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • சாண்ட்விச் சீஸ் - 3

  • முட்டை - 3

  • ப்ரெட் துண்டுகள் - 3

  • மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி

  • வெண்ணெய் - 3 தேக்கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

OruvanOruvan

Bread Egg cheese roll

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

அதனைத்தொடர்ந்து, ஒரு ப்ரெட் துண்டை எடுத்து அதன் ஓரங்களை நீக்கிவிட்டு ப்ரெட் துண்டுகளை ஒன்றன்மேல் ஒன்றாக சீசில் தடவி வைக்க வேண்டும்.

அடுத்ததாக, அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து அதில் வெண்ணெய் தடவி, சூடானதன் பின்னர் ஏற்கனவே செய்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.

பிறகு முட்டைகளை கல்லில் பரப்பி, அதன் மேல் சீஸ் தூவிய ப்ரெட்டை வைத்து முட்டையை கொண்டு சுற்றி நன்றாக சமைக்கவும்.

முட்டை, ப்ரெட் இரண்டும் நன்றாக வெந்தவுடன் பரிமாறலாம்.