ரயில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் நிரப்பப்படுவது ஏன்?: இதுதான் காரணம்

OruvanOruvan

Railway Track

நாம் அனைவரும் வாழ்வில் ஒரு தடவையேனும் ரயிலில் பயணம் செய்திருப்போம். அவ்வாறு பயணிக்கும்போது ரயில் தண்டவாளங்களின் நடுவில் ஜல்லி கற்கள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஏன் இவ்வாறு தண்டவாளங்களுக்கு நடுவில் கற்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று என்றாவது சிந்தித்திருப்போமா?

அதற்கான காரணத்தை பார்ப்போம்...

ரயில்கள் இரும்புப் பெட்டிகளால் உருவாக்கப்படுவதால் எடை அதிகமாக இருக்கும். இதனால் தண்டவாளத்தில் ரயில்கள் செல்லும்போது அழுத்தம் காரணமாக தண்டவாளங்கள் இரண்டும் விலகாமல் இருப்பதற்கு கற்கள் நிரப்பப்படுகின்றன.

நில நடுக்கம், அதிகமான வெப்பம் போன்ற காரணங்களினாலும் ரயில் தண்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இது போன்ற சந்தர்ப்பங்களில் தண்டவாளங்கள் விலகாமல் இருக்க கற்கள் நிரப்பப்படும்.

OruvanOruvan

Railway Track

இவ்வாறு ரயில் தண்டவாளங்களில் நிரப்பப்படும் கற்கள் மிகவும் கூர்மையானதாக இருக்கும். இந்த கூர்மை மர விட்டங்களை வழுக்கி சென்றுவிடாமல் தடுக்க உதவும்.

மேலும் புல் போன்ற தாவரங்கள் வளர்வதனால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படலாம். இவற்றை தடுக்கவும் தண்டவாளங்களின் நடுவில் ஜல்லி கற்கள் நிரப்பப்படுகின்றன.