25 வருடங்களாக திறக்கப்படாத ஹோட்டல்: பின்னணியில் உள்ள ரகசியம் என்ன

OruvanOruvan

Ryugyong Hotel

1987ஆம் ஆண்டில் 16,000 கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட ஹோட்டல் கட்டிடம் ஒன்று சுமார் 25 வருடங்களாக திறக்கப்படாமலே இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ryugyong எனப்படும் இந்த ஹோட்டல், வடகொரியாவின் தலைநகரான Pyongyang இல் அமைந்துள்ளது.

1082அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் சுமார் 3000 அறைகள் கட்டும் திட்டம் காணப்பட்டது. ஆனால், 25 வருடங்களுக்கு மேலாகியும் இது திறக்கப்படாமல் இருந்ததால் 'ஹோட்டல் ஆஃப் டூம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொருளாதார பிரச்சினைகளின் காரணமாக இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க முடியாமலே போய்விட்டதாம்.

OruvanOruvan

Ryugyong Hotel

கடந்த 2011ஆம் ஆண்டு இந்த ஹோட்டலின் கண்ணாடி பேனல்கள் நிறுவப்பட்டன. 2013ஆம் வருடம் இந்த ஹோட்டல் கட்டி முடிக்கப்படும் என கூறப்பட்டிருந்தாலும் அது நிறைவேறவில்லை.

மேலும் இந்த ஹோட்டலில் சில குறைபாடுகளும் உள்ளன. அதாவது, இதிலுள்ள லிப்ட் ஷாப்ட் வளைந்து விடப்பட்டதாகவும் அதன் தளங்கள் சாய்வாக இருப்பதாகவும் ஹோட்டலின் அமைப்பு துருப்பிடித்து பலவீனமாகிவிட்டதாகவும் நம்பப்படுகிறது.

2018ஆம் ஆண்டில் கட்டிடத்தில் எல்இடி பேனல்கள் நிறுவப்பட்டன. பின்னர் இது வடகொரிய அரசாங்க பிரச்சாரத்துக்கான மாபெரும் திரையாக மாற்றப்பட்டுள்ளது.

OruvanOruvan

Ryugyong Hotel

OruvanOruvan

Ryugyong Hotel