ரொம்ப பசிக்குதா?: சட்டென செய்யலாம் மசாலா மேகி
உடனடியாக செய்து உண்ணக்கூடிய உணவுகளில் மேகியும் ஒன்று. அந்த வகையில் வழமையாக செய்து உண்ணும் மேகியைப் போலல்லாமல் வித்தியாசமாகவும் சுவையாகவும் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
மேகி - 2 பாக்கெட்
மேகி டேஸ்ட்மேக்கர் பாக்கெட்டுகள் - 2 மேசைக்கரண்டி
மேகி மேஜிக் மசாலா - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
தக்காளி - 1 (சிறிதாக நறுக்கியது)
மஞ்சள் - அரை மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் வெட்டி வைத்துள்ள தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
இவை இரண்டும் நன்றாக வதங்கியதன் பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மேகி மேஜிக் மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் மேகியை சேர்த்துக் கொள்ளவும்.
அதன்பின்னர் மேகியுடன் மேகி டேஸ்ட் மேக்கர் பொடியைச் சேர்த்து நன்கு வேகவிட வேண்டும்.
மேகி நன்றாக வெந்தவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்.
அருமையான மசாலா மேகி தயார்.