பாம்பும் கீரியும் எதிரிகளாயிருக்க என்ன காரணம்: இரண்டில் எது அதிக பலசாலி

OruvanOruvan

Snake and Mongoose fight

மனிதர்களுக்குள் எதிரிகள் இருப்பது சகஜம்தான். ஆனால், விலங்குகளுக்குள் ஒன்றுக்கொன்று எதிரியாக இருப்பதுதான் பாம்பும் கீரியும்.

இந்த பாம்பும் கீரியும் எதற்காக சண்டை போட்டுக்கொள்கின்றன? எதற்காக பகைமை உணர்வோடு சுற்றித் திரிகின்றன என என்றாவது சிந்தித்திருப்போமா?

அது பற்றி பார்ப்போம்....

OruvanOruvan

Snake and Mongoose fight

இயற்கையாகவே கீரிக்கும் பாம்புக்கும் இடையில் பகையுணர்வு உண்டு. காரணம் பாம்புகள் கீரி குட்டிகளை தங்கள் இரையாக்கிக் கொள்கின்றன. இதனால் கீரிகள் தங்கள் குட்டிகளை பாதுகாப்பதற்காக பாம்புகளை தாக்குகின்றன.

அதேபோல் கீரிகளும் எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும் அதை கொன்று தின்றுவிடும்.

கீரிகள் பாம்புகளை விடவும் வேகமானவை. அவை பாம்பின் உடலில் தலை மற்றும் பின்புறத்தில் ஒரு அபாயகர தாக்குதலை செய்கின்றன. இது பாம்புகளின் மரணத்துக்கு வழிசமைக்கிறது.

OruvanOruvan

Snake and Mongoose fight

அதேபோல் பல சந்தர்ப்பங்களில் கீரியானது, பாம்பைக் கொன்று சாப்பிடும்பொழுது பாம்பின் பற்கள் கீரியின் வயிறு அல்லது வேறு பகுதிகளில் காயத்தை ஏற்படுத்துகின்றன.

இதனால் உள்ளார்ந்த இரத்தப்போக்கு ஏற்பட்டு கீரி மரணமடைகிறது.

ஆனால், பாம்புக்கும் கீரிக்கும் இடையில் நடைபெறும் சண்டையில் கீரி 75 முதல் 80 சதவீதம் வெற்றி பெறும் என கூறப்படுகிறது.