உங்கள் துணையுடன் 100 வருடம் சந்தோஷமாக வாழ வேண்டுமா?: அப்போ இதையெல்லாம் பண்ணுங்க

OruvanOruvan

Married Couple

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என கூறப்படுகிறது. ஆனால், ஒரு சில திருமணங்கள் பாதியிலேயே மனமுறிவில் முடிவடைந்துவிடுகிறது.

அதற்குக் காரணம், தம்பதியனருக்கிடையில் சரியான புரிந்துணர்வு இல்லாததுதான்.

சரி இனி கணவன் - மனைவி 100 வருடங்களுக்கு சந்தோஷமாக வாழ என்ன செய்யவேண்டும் எனப் பார்ப்போம்.

OruvanOruvan

Married Couple

கனவுகளை ஆதரியுங்கள்

கணவன் - மனைவி இருவருக்குமே அவர்கள் வாழ்க்கை குறித்தோ அல்லது தொழில் ரீதியாகவோ தனிப்பட்ட கனவுகள் இருக்கும். அந்த கனவுகளை ஒருவருக்கொருவர் ஆதரிக்க வேண்டியது கட்டாயம்.

தொடர்புக்கு முன்னுரிமை கொடுங்கள்

உங்கள் துணையுடன் சிறந்த தொடர்பை பேணுங்கள். திறந்த மற்றும் நேர்மையான தகவல் தொடர்புகள் என்பது கணவன் மனைவிக்கிடையில் மிகவும் அவசியமான ஒன்று. தொடர்புகளின் மூலம் நிறைய விடயங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.

OruvanOruvan

Married Couple

தனிப்பட்ட இடம்

தொழில், பொழுதுபோக்கு என்பவற்றில் அவரவரின் தனிப்பட்ட இடத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். திருமணத்தில் இது மிகவும் முக்கியமானது.

பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

வீட்டு வேலைகள், பிள்ளைகளின் வேலைகள், தொழில் ரீதியான வேலைகள் என்பவற்றை பகிர்ந்து செய்வது ஒருவித கூட்டு அணுகுமறையின் வெளிப்பாடாக இருக்கிறது.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்

வாழ்க்கைபயணத்தில் ஒன்றாக பயணிக்கும் தம்பதிக்கு வழியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படக்கூடும். அந்த மாற்றங்களை இருவரும் ஒன்றாக சேர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

OruvanOruvan

Married Couple

காதல்

திருமணத்துக்கு பின்பும் ஒருவரையொருவர் காதலியுங்கள். இது உங்கள் திருமண பந்தத்தை தினமும் புதிதாக்கும்.

நன்றி சொல்லுங்கள்

உங்கள் கணவரோ மனைவியோ உங்களுக்கு ஏதேனும் உதவிகள் செய்தால் உங்கள் நன்றியை தெரிவியுங்கள். இது பரஸ்பர மரியாதையாக இருக்கும்.