முடி உதிர்தல் பிரச்சினையா: உடனடி தீர்வு தரும் வேம்பாளம் பட்டை

OruvanOruvan

Vembaalampattai oil

தலைமுடி நல்ல அடர்த்தியாக காடு போல் வளர வேண்டும் என்பதே அனைவரதும் ஆசை. ஆனால், சில உணவுப் பழக்கங்கள், சரியான பராமரிப்பின்மை, சுற்றுச்சூழல் காரணங்களினால் முடி உதிர்தல் அதிகமாக ஏற்படுகிறது.

எனவே முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும், உதிர்ந்த இடத்தில் மறுபடி முடி வளரச் செய்யவும் வேம்பாளம்பட்டை எண்ணெய் நல்லதொரு தீர்வாக அமையும்.

வேம்பாளம்பட்டை எண்ணெய் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • வேம்பாளம்பட்டை - 5

  • தேங்காய் எண்ணெய் - அரை போத்தல்

  • வெட்டிவேர் - 50 கிராம்

  • ஆமணக்கு எண்ணெய் - 2 கரண்டி

  • வெந்தயம் - ஒரு கரண்டி

OruvanOruvan

Vembaalampattai oil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வெந்தயம், வெட்டிவேர் என்பவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின் இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காயவைத்து அதற்குள் ஒரு ஸ்டாண்ட் வைத்து, தேங்காய் எண்ணெய், வெட்டிவேர், வெந்தயம் சேர்த்து வைத்துள்ள பாத்திரத்தை அந்த ஸ்டாண்ட் மேல் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெய் நன்றாக சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, அதில் வேம்பாளம் பட்டை, ஆமணக்கு எண்ணெய் 2 கரண்டி, சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு, ஒரு வேம்பாளம்பட்டை போட்டு ஒரு நாள் முழுவதும் ஊறவிட வேண்டும்.

அடுத்த நாள் அந்த எண்ணெயை தலைக்கு தேய்க்கலாம்.

OruvanOruvan

Vembaalampattai oil