வித்தியாசமான நூடுல்ஸ் சூப்: வீட்டிலேயே செய்து அசத்தலாம்

OruvanOruvan

Noodles soup

எப்போதும் போல் நூடுல்ஸை தனியாகவும் சூப்பை தனியாகவும் உண்ணாமல் சற்று வித்தியாசமாக நூடுல்ஸ் சூப் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

 • நூடுல்ஸ் - 1 கப்

 • வெங்காயம் - 1

 • சோளம் - சிறிதளவு

 • பட்டாணி - சிறிதளவு

 • வெள்ளைப் பூண்டு - 1 பல்

 • கெரட் - அரை கப்

 • பீன்ஸ் - 2

 • குடைமிளகாய் - சிறிதளவு

 • முட்டைக்கோஸ் - சிறிதளவு

 • வெண்ணெய் - 1 கரண்டி

 • மிளகுத் தூள் - 1 கரண்டி

 • சோள மா - 1 கரண்டி

 • ஸ்ப்ரிங் ஒனியன் - பாதி

 • சோயா சோஸ் - 1 கரண்டி

 • மல்லித்தழை - சிறிதளவு

 • உப்பு - தேவையான அளவு

OruvanOruvan

Noodles soup

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நூடுல்ஸை சேர்த்து வேகவைக்க வேண்டும்.

அதன்பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் சிறிதாக வெட்டி வைத்துள்ள வெள்ளைப் பூண்டை சேர்த்து வதக்கிவிட வேண்டும்.

அதனுடன் சிறிதாக வெட்டி வைத்துள்ள வெங்காயம், காய்கறிகள் என்பவற்றை சேர்த்து வதக்கி, அதில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த நூடுல்ஸ், சோயா சோஸ், மிளகுத்தூள் என்பவற்றை சேர்க்க வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தில் சோள மா சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து சூப்பில் ஊற்றி வேண்டும்.

கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மல்லித்தழை, ஸ்பிரிங் ஒனியன் சேர்த்து பரிமாறினால் வித்தியாசமான நூடுல்ஸ் சூப் தயார்.