வழியில் கறுப்பு பூனையைக் கண்டால் ஆபத்தா?: உண்மைக் காரணம் என்ன?

OruvanOruvan

Black Cat

நம்மில் பலருக்கு இருக்கும் பெரும் பிரச்சினை என்னவென்றால், மூட நம்பிக்கைகள் மீது தீரா நம்பிக்கை வைத்திருப்பதுதான்.

நாம் வெளியில் செல்லும்போது குறுக்கே பூனையைக் கண்டால் அதனை கெட்ட சகுணமாக கருதுகிறோம்.

நம் முன்னோர்களின் காலத்திலிருந்தே பூனைகள் வீட்டுக்கு எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருகின்றன என்ற நம்பிக்கை உண்டு. பூனை இடமிருந்து வலமாக நகர்ந்தால் அது மோசமான அறிகுறி என்றும் வலமிருந்து இடமாக நகர்ந்தால் மங்களகரமானதாகவும் அர்த்தம் கொள்ளப்படுகிறது.

OruvanOruvan

Black Cat

பூனைகள் அழுதால் அது சாதகமற்ற ஒரு விடயமாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக கறுப்பு பூனைகள் குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். காரணம் கறுப்பு சனி பகவானுக்கு உகந்தது என்பதால் தீங்கு ஏற்பட்டுவிடும் என நம்பப்படுகிறது.

பூனைகள் பற்றி அறிவியல் கூறுவது என்ன?

முற்காலத்தில் போக்குவரத்துக்கு மக்கள் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்துவதால் பூனை குறுக்காக சென்றால், மாடு பயந்துவிடும். இதனால் மக்கள் வண்டியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து செல்வார்கள்.

இது நாளடைவில் ஒரு மூட நம்பிக்கையாகவே மாறிவிட்டது.

OruvanOruvan

Black Cat