வாகனங்களின் சக்கரங்கள் கறுப்பு நிறத்தில் இருக்க என்ன காரணம்: பின்னால் இவ்வளவு பெரிய காரணம் உள்ளது

OruvanOruvan

Black Color Tyers

வாகனங்களை ஓட்டும், பயன்படுத்தும் நாம், அந்த வாகனங்களில் உள்ள சக்கரங்கள் ஏன் கறுப்பு நிறத்தில் மட்டுமே இருக்கின்றன என என்றாவது சிந்தித்திருக்கிறோமா?

அது பற்றி இப்போது பார்ப்போம்.

1895ஆம் ஆண்டேிலேயே முதன் முதலில் வாகன சக்கரங்கள் உருவாக்கப்பட்டன. ஆரம்பத்தில் தூய்மையான ரப்பரைக் கொண்டு வெள்ளை நிறத்திலேயே தயாரிக்கப்பட்டன.

ஆனால், வெள்ளை நிற சக்கரங்களினால் நீண்ட நாட்களுக்கு நீடித்து உழைக்க முடியவில்லை. வெப்பத்தை எதிர்க்கும் திறனும் அவற்றுக்கு இருக்கவில்லை. மேலும் 'க்ரிப்பிங்' திறனிலும் அவை பின்னடைவை சந்தித்தன.

OruvanOruvan

Black Color Tyers

வெள்ளை நிற சக்கரங்களின் இந்த குறைபாடுகளினால், சல்பருடன் சேர்த்து கார்பன் ப்ளாக் (Carbon Black) என கூறப்படும் வேதி சேர்மத்தையும் தூய்மையான ரப்பருடன் கலந்தனர்.

ஏனைய வேதிப்பொருட்களை விட 'கார்பன் ப்ளாக்' மிகவும் மலிவானது என்பதனால் கார்பன் ப்ளாக் சேர்க்கப்பட்டது.

இதிலிருந்துதான் சக்கரங்கள் கறுப்பு வண்ணமாக மாறியது.

கறுப்பு வண்ணமாக இருக்கும்பொழுது சக்கரங்கள் விரைவாக சேதமடையாது. அதனாலேயே இப்பொழுது வெள்ளை நிற சக்கரங்களிலிருந்து கறுப்பு நிற சக்கரங்களுக்கு மாறிவிட்டோம்.

OruvanOruvan

Black Color Tyers