அசத்தும் சுவையில் எக்லெஸ் சொக்லேட் வால்நட் ப்ரவுனி: வீட்டிலேயே செய்து அசத்தலாம்

OruvanOruvan

Eggless Chocolate Walnut Brownie

சொக்லேட் பிடிக்காதவர்கள் உலகில் யாரேனும் இருக்க முடியுமா? அந்த சொக்லேட்டை வைத்து எக்லெஸ் சொக்லேட் வால்நட் ப்ரவுனி எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • டார்க் சொக்லேட் - கால் கப்

  • மைதா மா - 5 கரண்டி

  • வெண்ணெய் - 2 கரண்டி

  • பால் - 4 கரண்டி

  • சர்க்கரை - 3 கரண்டி

  • வெணிலா எசன்ஸ் - சிறு துளி

  • சொக்கோ சிப்ஸ் - 3 கரண்டி

  • வால்நட் - 3 கரண்டி

  • உப்பு - தேவையான அளவு

OruvanOruvan

Eggless Chocolate Walnut Brownie

எவ்வாறு செய்யலாம்?

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் இன்னொரு கிண்ணத்தை வைத்து டார்க் சொக்லேட்டை போட்டு உருகும்படி செய்ய வேண்டும்.

அதன் பின்னர் அதில் வெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.

உருக்கிய சொக்லேட்டில் மைதா, சர்க்கரை சேர்த்து அதில் பால் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். அதில் வால்நட், வெணிலா எசன்ஸ், சொக்கோ சிப்ஸ் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு கப் அல்லது கேக் மோல்டில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அடிகனமான பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் உப்பு போட்டு ஒரு ஸ்டாண்ட் வைத்து, 15 நிமிடத்துக்கு சூடாக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ப்ரவுனி கலவையை எடுத்து உள்ளே வைத்து ஆவி வெளியே போகாத அளவுக்கு மூடி போட்டு மூடி 30 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

அருமையான எக்லெஸ் வால்நட் சொக்லேட் ப்ரவுனி தயார்.

OruvanOruvan

Eggless Chocolate Walnut Brownie