ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கோழிகள் கொல்லப்படுகின்றன: உணவுக்காக பறிபோகும் உயிர்கள்
மனிதனின் உணவுத் தேவையை தீர்ப்பதற்காக வருடம் ஒன்றுக்கு சுமார் 10,000 கோடி விலங்குகள் கொல்லப்படுகின்றன.
இதன்படி தி எகனாமிஸ்ட் என்ற முன்னணி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆண்டொன்றுக்கு 1900 கோடி கோழிகளும் 150 கோடி மாடுகளும் 100 கோடி ஆடுகளும் 100 கோடி பன்றிகளும் 83 ஆயிரம் முதலைகளும் 50 ஆயிரம் ஆமைகளும் 8 லட்சம் ஒட்டகங்களும் 1 லட்சம் எருமை மாடுகள், 50 குதிரைகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன.
இந்த ஒட்டுமொத்த விலங்குகளில் அதிகமாக சாப்பிடப்படும் உணவாக கோழி உள்ளது.
நாளொன்றுக்கு 20 கோடிக்கும் மேலாக கோழிகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன. அந்த வகையில் ஒரு நிமிடத்தில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோழிகள் இறக்கின்றன.