சத்தான முருங்கைக்கீரை சட்னி: சட்டென செய்து விடலாம்

OruvanOruvan

Spinach Chutney

கீரைகள் எப்பொழுதுமே அதிக சத்து நிறைந்தவை. அதுவும் முருங்கைக் கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அப்படிப்பட்ட முருங்கைக்கீரையைக் கொண்டு எப்படி சட்னி செய்யலாம் எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • முருங்கைக்கீரை - 1 கைப்பிடியளவு

  • துருவிய தேங்காய் - 1/2 கப்

  • பச்சை மிளகாய் - 3

  • தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

  • புளி - சிறிய துண்டு

  • உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு

  • எண்ணெய் - 1 தேக்கரண்டி

  • கறிவேப்பிலை - சிறிதளவு

  • சீரகம் - 1/4 தேக்கரண்டி

  • கடுகு - 1/2 தேக்கரண்டி

OruvanOruvan

Spinach Chutney

எவ்வாறு செய்யலாம்?

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் முருங்கைக்கீரை, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

அதன் பின்னர் மிக்ஸியில் துருவிய தேங்காய், முருங்கைக்கீரை, புளி, உப்பு சேர்த்து அரை கப் நீர் ஊற்றி நன்கு அரைத்தெடுக்க வேண்டும்.

கடைசியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கறிவேப்பிலை, சீரகம், கடுகு சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறிவிட்டு இறக்க வேண்டும்.

சத்தான முருங்கைக்கீரை சட்னி தயார்.

OruvanOruvan

Spinach Chutney