இப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்: பெண்களை ஈர்க்கும் ஆண்களின் ஆளுமைகள்

OruvanOruvan

Attractive Men

நல்ல கட்டுடலோடு பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்றொரு கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது.

உண்மையில் ஆண்களின் அழகு மட்டுமல்ல சில ஆளுமைப் பண்புகளும் பெண்களை எளிதாக ஈர்க்கும். சரி இனி பெண்களை ஈர்க்கக்கூடிய ஆண்களின் ஆளுமைப் பண்புகள் எவையெனப் பார்ப்போம்.

OruvanOruvan

Attractive Men

அக்கறையுள்ள ஆண்கள்

ஒரு பெண்ணுக்கு என்ன தேவை? என்ன பிடிக்கும் என்பதை அவர்களின் முகத்தை பார்த்தே புரிந்துகொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பெண்ணும் அதைத்தான் எதிர்பார்ப்பாள். திரைப்படங்களில் வருவதைப் போல பெண்கள் மோசமான ஆண்களை என்றுமே பின்தொடர விரும்புவதில்லை. தன்மேல் அக்கறையுள்ள ஆண்களையே விரும்புகின்றனர்.

நம்பிக்கையான ஆண்கள்

ஒரு ஆணிடம் ஒரு பெண் நம்பிக்கையை உணர்ந்தால் போதும். அதுவே பெரிய ஈர்ப்பு விசையாக அமைந்துவிடும். எந்த ஒரு ஆண், தனது காதலியின் ஆண் நண்பர்கள் அல்லது சக ஊழியர்களால் அச்சுறுத்தப்பட்டதாக உணரவில்லையோ, அப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள்.

OruvanOruvan

Attractive Men

புத்திசாலியான ஆண்கள்

ஒரு பெண் உங்களுடன் உரையாடும்போது அவளுக்கு ஒரு வித சலிப்பை ஏற்படுத்தாத நகைச்சுவை கலந்த உரையாடலை நீங்கள் மேற்கொண்டீர்களானால் பெண்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அறிவார்ந்த உரையாடல் என்பது உறவை தக்கவைப்பதன் பெரும் பகுதி. உரையாடலை சுவாரஷ்யமாக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

உணர்வுப்பூர்வமான ஆண்கள்

தன்னை எப்பொழுதும் சிறப்பானவராக உணர வைக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆண் தன்மீது வைத்திருக்கும் காதலை சின்னச் சின்ன விடயங்கள் மூலம் அடிக்கடி வெளிப்படுத்துவது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒரு ஆளுமையாகும்.

OruvanOruvan

Attractive Men

கலைஞர்கள்

தான் விரும்பும் பெண்ணை மையப்படுத்தி பாடலோ, கவிதையோ எழுதி சமர்ப்பிக்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் கலைஞர்கள் எப்பொழுதுமே தன்னிச்சையாக சிந்திக்கக்கூடியவர்கள்.