மென்மையான கூந்தல் வேண்டுமா?: வீட்டிலேயே ஹேர் கண்டிஷனர் செய்யலாம்

OruvanOruvan

Natural hair conditioner

கூந்தலை மென்மையாகவும் பட்டுப்போன்றும் வைத்திருக்க வீட்டிலேயே இயற்கையான ஹேர் கண்டிஷனர் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல் - 3 கரண்டி

  • ஆலிவ் எண்ணெய் - 2 கரண்டி

செய்முறை

  • முதலில் நமது முடிக்கு தகுந்தளவு கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • இவற்றை நன்றாகக் கலந்து முடியின் வேர்க்கால்களில் தொடங்கி நுனி வரை பூச வேண்டும்.

  • இதன் பின்னர் சுடு தண்ணீரில் நனைத்த ஒரு துண்டினைக் கொண்டு தலைமுடியில் அரை மணித்தியாலம் வரையில் கட்டிவிட வேண்டும்.

  • கடைசியாக ஷெம்பூ போட்டு முடியை கழுவ வேண்டும்.

OruvanOruvan

Natural hair conditioner

குறிப்புகள்

  • கண்டிஷனர் தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும்.

  • எண்ணெய் பசையுள்ள தலைமுடியாக இருந்தால் இந்த கண்டிஷனரை பயன்படுத்தக் கூடாது.

  • ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே இந்த கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும்.