எளிதில் எதையும் விட்டுக்கொடுக்காதவர்கள் இவர்கள்: 'A' எழுத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்

OruvanOruvan

A Letter

ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் முதலில் இருப்பது 'A'. இந்த முதல் எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என பார்ப்போம்.

தனித்து செயல்படுவதை அதிகம் விரும்புபவர்கள். மன தைரியமும் தன்னம்பிக்கையும் இவர்களுக்கு அதிகம். எதையும் தாங்கும் இதயம் இவர்களுடையது. ஒரு விடயத்தை நினைத்துவிட்டால் அதை எப்பாடுபட்டேனும் நிறைவேற்றி விடுவார்கள்.

எளிதில் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இவர்களது நேர்மை சில சமயங்களில் மற்றவர்களை காயப்படுத்தலாம்.

OruvanOruvan

A Letter

பலம்

யார் கூறுவதையும் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். தனக்கான விதிகளை தானே நிர்ணயித்து கொள்வார்கள். மற்றவர்களின் விடயத்தில் தேவையில்லாமல் உள்நுழைய மாட்டார்கள். அனைத்திலும் முன்னிற்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர்கள், தனித்து தெரியக் கூடியவர்கள்.

பலவீனம்

சூழ்நிலைக்கேற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மை கிடையாது. சுயநலவாதிகளாக இருப்பார்கள். தனது விருப்பம் மற்றும் வெறுப்புகளில் மாறாமல் இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகம். அனைவரும் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் நிறைந்தவர்கள். தோல்வி/சரிவு என்பவற்றை தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.

OruvanOruvan

A Letter

தொழில்

மிகப்பெரிய ஆளுமைத்திறன் கொண்ட இவர்கள், தன்னுடைய துறையில் தனித்து விளங்க வேண்டும் என்ற சிந்தனை கொண்டிருப்பார்கள். தொழிலில் குறுக்கு வழியில் செல்ல இவர்களுக்கு பிடிக்காது. இவர்கள் தேர்ந்தெடுக்கும் முறை இவர்களுக்கு பொருத்தமானதாகத்தான் இருக்கும்.

உறவுகள்

காதல், திருமணம் என்பவற்றில் கொஞ்சம் கவனமாக இருப்பார்கள். குறுகிய நட்பு வட்டாரமே இருக்கும். உறவுகளிடம் ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பார்கள். தன்னுடன் ஒத்துப்போகும் நபர்களிடமே நட்புடன் இருப்பார்கள்.

'A' என்ற முதலெழுத்து வரலாற்றில் மிகப்பெரிய சாதனை புரிந்தவர்கள், காலத்தால் மறக்க முடியாதவர்கள் ஆகியோரின் பெயர்கள் ஆரம்பிக்கும் எழுத்தாக உள்ளது.

OruvanOruvan

A Letter